ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத் 7:11). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நமது பரலோக பிதா உங்கள் மீது வைத்திருக்கிற அன்பும், பாசமும், நேசமும், விருப்பமும், பராமரிப்பும் , உங்கள் பூலோக உலகப் பிரகாரமான பெற்றோர் உங்கள் மீது வைத்திருக்கிற அன்பை பார்க்கிலும் , அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கிற பாசத்தைப் பார்க்கிலும், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கிற நேசத்தைப் பார்க்கிலும், அவர்கள் உங்களை பராமரிப்பதை பார்க்கிலும் அதிகமானது , கனமானது, மேன்மையானது. பரலோக பிதாவின் அன்பு , இரக்கம், கிருபை கடலைப் போன்று, சமூத்திரத்தைப் போன்று மிகப் பெரியது. உங்கள் பூலோக பெற்றோரின் அன்பு , மனுஷரின் அன்பு கடலில் உள்ள, சமூத்திரத்திலுள்ள ஒரு துளி தண்ணீர் ப...