கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங் 23:1). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த சங்கீதத்தை எழுதின தாவீதுக்கு கர்த்தரே அவரது மேய்ப்பனாக இருக்கிறார். அதனால் தான் அவர் சொல்லுகிறார் ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் ‘ என்று. அதுமாத்திரமல்ல ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பன் எவ்வாறு தன்னுடைய ஆடுகளை ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்து பராமரித்து வருகிறானோ அதேபோல் தன்னுடைய மேய்ப்பனாகிய கர்த்தரும் தன்னை ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து தன்னுடைய தேவைகளையயும் அந்த அந்த நேரங்களில் அவர் சந்திப்பார் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தபடியால் தான் அவர்  விசுவாசத்தோடு உறுதியாகச் சொல்லுகிறார் ‘ நான் தாழ்ச்சியடையேன் ‘ என்று. அல்லேலூயா ! இயேசுவை பின்பற்றுகிற அவருடைய  பிள்ளைகளுக்கு இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பனாக இருக்கிறார் (யோவா 10:11) . ஆகவே நீங்களும் தாவீதை போல் விசுவாசத்தோடு சொல்லுங்கள் ‘ கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன் என்று. தாவீதுக்கு  மேய்ப்பனாக இருந்து அவனை ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்து அவனுடைய தேவைகளை ஏற்ற வேளைகளில் சந்தித்த தேவன் நிச்சயமாக உங்களுக்கும் அவர் நல்ல மேய்ப்பனாக இருந்து உங்களை பாதுகாத்து உங்களுடைய தேவைகளையும் அவர் சந்திக்க அவர் போதுமானவராக இருக்கிறார். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?