மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார் ? ( நீதி 20: 6 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே , இந்நாட்களில் பெரும்பாலானோர் போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் , இப்படிப்படடவர்கள் பிறருக்கு உதவியை செய்துவிட்டு, தாங்கள் செய்த உதவியை அதிக அளவில் விளம்பரப்படுத்துகிறவர்களாக இருப்பதோடு , தாங்கள் செய்த உதவிக்காக பிரதி பலனை எதிர்பார்க்கிறவர்களாகவும் இருப்பார்கள் , இவர்கள் தாங்கள் மற்றவர்களை பார்க்கிலும் பரிசுத்தமுள்ளவர்கள் போல் நடிப்பார்கள் , மற்றவர்களுக்கு முன்பாக தாங்கள் ஜெபத்தில் , ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்து இருப்பதாக பாசாங்கு காட்டுவார்கள் , வேத புஸ்தகத்தில் இருக்கும் தேவனுடைய வசனங்களை பிரசங்கிப்பார்கள் , ஆனால் இவர்கள் பிரசங்கிப்பதட்கும் , இவர்களுடைய வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமே இருக்காது , இவர்கள் தங்களுக்கு சுய மகிமையை தேடிக்கொள்ளுபவர்களாகவும் , தட்புகழ்ச்சியை விரும்புகிறவர்களாகவும் , தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துகிறவர்களாகவும் இருப்பார்கள், இவர்களுடைய வாழ்க்கையோ போலியாக இருக்கும் , ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுவது போல் நடிப்பார்கள் ஆனால் இவர்களுடைய வாழ்க்கையில் எந்த உண்மையுமிருக்காது . ஆகவே பிரியமானவர்களே , இப்படிப்படடவர்களை நீங்கள் வாழ்க்கையில் கண்டு பிடித்து அவர்களுக்கு விலகியிருக்க வேண்டும். 2 தீமோ 3 : 1 - 5 இல் தேவன் நமக்கு எச்சரிக்கிறார் ‘ மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில் , மனுஷர்கள்தற்பிரியராயும் , பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும் ,தூஷிக்கிறவர்களாயும் ,தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும் ,நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பு இல்லாதவர்களையும் , இணங்காதவர்களாயும்,அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கம் இல்லாதவர்களையும் , கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் , துரோகிகளாயும் , துணிகரமுள்ளவர்களாயும் , இறுமாப்பு உள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் , தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு’ என்று. ஆம், வேத வசனங்கள் எவ்வளவு உண்மையானவை , இப்படியெல்லாம் நடக்கும் என்று தேவன் ஏற்கனவே அறிந்தபடியால் தான் தேவன் அவருடைய வார்த்தைகளை நமக்கு ஒரு புஸ்தமாக எழுதிக்கொடுத்திருக்கிறார். அல்லேலூயா ! தேவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆகவே நீங்கள் வேத புஸ்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு தேவனுடைய வசனங்களையும் விசுவாசித்து அவற்றுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது தேவனுடைய பாதுகாப்பும் , ஆசிர்வாதமும், சமாதானமும் உங்களை எப்போதும் சூழ்ந்து கொள்ளும். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment