கர்த்தருடைய காருணியம்

உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் (2 சாமூ 22:36 & சங்கீ 18:35 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய கண்களில் நமக்கு கிடைக்கிறதான தயவு, இரக்கம், காருணியமே நம்மை பெரியவர்களாக்குகிறது, நம்மை ஆசீர்வதிக்கிறது. இன்று அநேகர் மனுஷருடைய தயவை பெற்றுக்கொள்ளுவதட்காக முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் நம் வாழ்க்கையில் நாம் உயர்த்தப்பட முக்கியமாக தேவ தயவு, இரக்கம், அன்பு, காருணியம் வேண்டும். தேவனுடைய தயவை நாம் பெற்றுக்கொள்வதற்கு பிரயாசப்படவேண்டும். அல்லேலூயா ! தாவீது அவருடைய வாழ்க்கையில் கிடைத்த அனைத்து வெற்றிகளுக்கும் கர்த்தரே காரணம் என்பதை நன்கு அறிந்திருந்தார். கர்த்தர் அவரை சவுல், அப்சலோம் கைகளில் இருந்து  பாதுகாத்தது மாத்திரமல்ல மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், சீரியர் மீதான யுத்தங்களிலும் கர்த்தர் தாவீதுக்கு ஜெயத்தைக் கொடுத்தார். கர்த்தர் தான் தனக்கு ஜெயத்தைக் கொடுத்தார் என்பதை அவர் நன்கு அறிந்தபடியால் தான் அவர் சொல்லுகிறார் , உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் என்று. அல்லேலூயா ! ஆம் பிரியமானவேகளே, கர்த்தருடைய காருணியமே ஒருவனை பெரியவனாக்குகிறது. உங்களுடைய  வாழ்க்கையிலும் கர்த்தருடைய காருணியம் இருக்குமானால் நிச்சயமாக நீங்கள் வாழ்க்கையில் உயர்த்தப்படுவீர்கள். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு  உங்களையும் , உங்கள் குடும்பத்தையும்  ஆசீர்வதிப்பாராக. 

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?