உங்களை உங்கள் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிக்கும் தேவன்

இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார் (சங் 34:6 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,  இந்த சங்கீத்தை தாவீது தான் சவுலுக்குப் பயந்து தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்ரவேல் தேசத்தை விட்டு தப்பி ஓடி காத்தின் ராஜா ஆகிசிடத்தில் (அபிமெலேக்கு) போய் அவனுக்கு முன்பாக பித்துப் பிடித்தவன் போல நடித்து அவனால் துரத்திவிடப்படட போது பாடினார். அந்த இறுக்கமான சூழ்நிலையில் அவர் எல்லாவற்றையும் இழந்து தான் ஒரு ஏழை போல உதவியற்ற நிலையில் இருக்கிறார் அப்போது தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் போது கர்த்தர் அவருடைய கூப்பிடுதலை, விண்ணப்பத்தைக் கேட்டு  அவரை அவருடைய இடுக்கண்களுக்கெல்லாம் நீக்கி அவரை இரட்சிக்கிறார் , கர்த்தருடைய சமூகத்தில் தாவீதுக்கு கிருபையும், இரக்கமும், அநுக்கிரகமும் கிடைக்கின்றது. அதனால் தான் அவர் பாடுகின்றார் ‘ இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார் ‘ என்று. அல்லேலூயா ! தாவீதை போல் நீங்களும் ஒரு நெருக்கமான, இறுக்கமான, உதவியற்ற சூழ்நிலையில் இருக்கின்றிங்களா? தாவீதைப் போல் நீங்களும் தேவனை நோக்கி உங்களுடைய விண்ணப்பங்களை ஏறெடுங்கள், தாவீதை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி அவனை பாதுகாத்த தேவன் உங்களையும் உங்கள் இடுக்கண்களிலிருந்து நீங்கலாக்கி உங்களைப் பாதுகாக்க, இரட்சிக்க தேவன் இயேசு உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?