கர்த்தருடைய இரக்கம்

கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற்போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது (சங்40:11). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். தாவீது ராஜா கர்த்தருடைய சமூகத்தில் ‘ கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற்போகப்பண்ணாதேயும் ‘ என்று   கர்த்தருடைய இரக்கங்களுக்காக மனதுருகி ஜெபிக்கிறார். பிரியமானவர்களே , தாவீது ராஜாவைப் போல நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய இரக்கங்களுக்காக ஜெபிக்க வேண்டும். அவருடைய இரக்கங்களே நம் ஒவ்வொருவரையும் வாழ வைக்கின்றது. அவருடைய கிருபையும், அன்பும்,உன்மையுமே இந்நாள் வரை உங்களைக் பாதுகாத்து வந்திருக்கிறது. அல்லேலூயா! கர்த்தர் தமது அன்பையையும், கிருபையையும், இரக்கங்களையும் இன்னுமாய் உங்கள் மீதும் , உங்கள் குடும்பத்தின் மீதும் பொலியச் செய்வாராக.ஆமென்.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்