நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது

நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது (ஆதி6:8). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே  , மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் (ஆதி 6 : 5 - 9). நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவாவை  நீதிமானாக்கியதும், உத்தமனும்மாக்கியதும் கர்த்தருடைய கிருபையே. நோவாவினிடத்தில் பாவமே இல்லாத பரிபூரணமான உத்தம குணம் காணப்படவில்லை, ஆனாலும் அவர் கர்த்தரைத் தேடுவதிலும், கர்த்தருக்குக் கீழ்ப்படிவதிலும் உண்மையுள்ளவராகவும்,   உத்தமனுமாயிருக்கிறார். நோவா எவ்வளவு விசேஷித்த மனிதன் என்று பாருங்கள் , வானத்தையும் , பூமியையும் சிருஷ்டித்த கர்த்தருடைய கண்களில் அவனுக்கு கிருபை கிடைத்தது, அதன் நிமித்தம் அவனும், அவனுடைய மனைவி , மூன்று பிள்ளைகள் , அவர்களுடைய மூன்று மனைவிகளும் ஜலப்பிரயத்தில் இருந்து மொத்தமாக எட்டு பேர் மாத்திரம் காப்பாற்றப்படுகிறார்கள்.  பிரியமானவர்களே, நீங்களும் நோவாவைப் போல கர்த்தரைத் தேடுவதிலும், கர்த்தருக்குக் கீழ்ப்படிவதிலும் உண்மையாய் , உத்தமனாயிருக்கும் போது உங்களுக்கும் வானத்தையும், பூமியையும் படைத்த தேவனின் கண்களில் கிருபை கிடைக்கும், அவருடைய கிருபை ஒன்றே நமக்கு இந்நாளில்  போதுமானதாயிருக்கிறது , அவருடைய கிருபையினால் நாம் நிர்மூலமாகாதிருக்கிறோம் என்று புலம்பல் 3:22 இல் வாசிக்கிறோம். அல்லேலூயா !  தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?