கசப்பான வைராக்கியமும், விரோதமும்

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால் (யாக் 3:14 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய இருதயத்தில் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை, அருவருப்பான காரியங்களை வைத்திருக்கக் கூடாது. நம்முடைய இருதயம் கர்த்தருக்கு முன்பாக சுத்தமுள்ளதாக இருக்க வேண்டும். நாங்கள் ஆராதிக்கும் தேவன் பரிசுத்தமுள்ளவர், ஆகவே அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நம்முடைய பரலோக தகப்பனுடைய குணாதிசயங்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும். இருதயத்தில் கசப்பான வைராக்யத்தையும், விரோதத்தையும் வைத்திருக்கக் கூடாது. ஒரு பாவம் மற்றோரு பாவத்தைப் பிறப்பிக்கும். கசப்பான வைராக்கியமும், விரோதமும் கலகத்தையும், துர்ச்செய்களையும் உண்டாக்கும். ஒரு துர்ச்செய்கையானது இன்னும் அநேக துர்செய்களைப் பிறப்பிக்கும். இவைகள் பிசாசினுடைய கிரியைகள். ஆகேவ பிரியமானவர்களே , கசப்பான வைராக்யத்தையும், விரோதத்தையும் உங்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போட்டு உங்களுடைய இருதயத்தை பரிசுத்தப்படுத்தி கொள்ளுங்கள். தேவன் இயேசுவின் வருகை மிகவும் சமீபமாய் இருக்கிறபடியால் நாம் நம்மை அவருடைய வருகைக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. விஷேசமாக தேவனுடைய கனமான ஊழியத்தை செய்கிற  நீங்கள் இப்படிப்படட பிசாசினுடைய கிரியைகளை உங்களுடைய இருதயத்தில் இருந்து எடுத்துப்போடுங்கள்.அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?