உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்(பிலி4:19).வேதவசனம் ஒரு போதும் பொய்யாகாது.தேவன் இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை வைக்கும் போது உங்களுடைய குறைவை எல்லாம் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் படி கிறிஸ்து யேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். உங்களுயை தேவைகளை சந்திக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.அதனால் ஒன்றையும் குறித்து கவலைபடாதீங்க.இதை நான் அனுபவரீதியாக உணர்ந்து உள்ளேன் , உணர்ந்து கொண்டிருக்கிறேன்.வேத புஸ்தகத்தில் ஒரு சம்பவம் எழுதப்படிருக்கு, இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் கானாவூரில் நடந்த ஒரு கல்யாணத்துக்கு அவரை அழைத்து இருந்திருந்தார்கள், அங்கே கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு திராச்சைரசம்  அருந்த பரிமாறப்பட்ட்து , ஆனால் அவர்கள் எதிர்பார்க்க வில்லை திராச்சைரசத்தில் குறைவு வரும் என்று, இயேசுவும் அங்கே இருந்த படியால் அவருக்கு திராச்சை ரசம் குறைவாக இருப்பதை குறித்து சொன்ன போது இயேசு தண்ணீரை திராச்சை ரசமாக மாற்றி கல்யாண வீட்டில் இருந்த குறைவை நீக்கினார்.அதே போல உங்கள் வாழ்க்கையிலும் ஏதாவது தேவை அல்லது குறைவு இருக்குமானால் நீங்களும் இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை வைத்து அறிவித்து விடுங்கள்.நிச்சயமாக இயேசு உங்களுடைய குறைவை, பற்றாக குறையை நீக்கி போடுவார்.அல்லேலூயா. தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?