தேவனுடைய வசனம் சொல்லுகிறது ,நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். (நீதிமொழிகள் 13 :12 ) ஆம் பிரியமானவர்களே நீங்கள் நெடு நாளாய் காத்து இருக்கிறீங்களா ? எப்போது கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறீங்களா? நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார். கவலை பட வேண்டாம் எவ்வளவு காலம் காத்திருப்பது என சோர்ந்து போகாதீர்கள், தேவன் மீது வைத்திருக்கிற விசுவாசத்தை இழந்து விடாதீங்க.தேவன் மீது தொடர்ந்து உங்களுடைய நம்பிக்கையையும் , விசுவாசத்தையும் வையுங்கள்.அப்படி நீங்கள் காத்திருக்கும் நாட்களில் உங்களுடைய எதிராளியான பிசாசுக்கு நீங்கள் இடம் கொடுப்பீர்களானால் அவன் உங்களை தேவனை விட்டு பிரித்து விடுவான். ஆகவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நிச்சயமாக உங்களது ஜெபத்திற்கும் கண்ணீருக்கும், கிரியைக்கும் ஏற்ற காலம் வரும்போது, அத்தனை பலனையும் தேவன் காண செய்வார். அவர் ஏற்ற வேளையில் கொடுக்கும்போது நிச்சயமாகவே அது உங்களுக்கு ஜீவ விருட்சத்தை போல நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். அல்லேலூயா! தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா.The word of God says that , Hope deferred makes the heart sick,But when the desire comes, it is a tree of life (Proverb 13:12 ). Yes beloved, Are you waiting for a long time? Are you looking forward to when? God knows you have been waiting a long time.Do not worry how long you wait, do not lose your faith in God, continue to put your trust and faith in God.And don’t give devil any place in your waiting days, he will separate you from God.Therefore, you have to be very careful.When the right time comes , surely God will help you to see all the benefits for your prayers, tears, and deeds,it will surely give you a good reward, like a tree of life.Hallelujah! May God Jesus Christ bless you and your family.Bro.Sanjeev Vivekanandarajah.
x
Comments
Post a Comment