தீமைகளை நன்மைகளாக மாற்றும் தேவன் இயேசு

வேதம் சொல்லுகிறது , தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று (ரோமன் 8 :28 ) தேவன் மீது அன்பு செலுத்துகிறவர்களுக்கு  வாழ்க்கையில் எது நடந்தாலும் அது நன்மையாகவே நடக்கும். தேவன் உங்களை மனிதனாக சிருஷ்டித்தது மாத்திரம் அல்ல , உங்களுடைய பாவங்களுக்காக , உங்களுடைய அக்கிரமங்களுக்காக ,உங்களுடைய மீறுதலுக்காக  கல்வாரி சிலுவையில் மரித்து ,மூன்றாம் நாள் உயிரோட எழும்பி அவர் தன்னுடைய  அன்பை வெளிபடுத்தினார்.அந்த அன்புள்ள தேவனை யார் யார் எல்லாம் நேசிக்கிறார்களோ அவர்களுக்கு  வாழ்க்கையில் எல்லாமே  நன்மையாகவே நடக்கும். வேத புத்தகத்தில் ஜோசப் என்ற ஒரு வாலிபனை குறித்து வாசிக்கின்றோம், அவனுடைய  எஜமானின் மனைவி  தன்னுடன் சயனிக்குமாறு அவனை கடடாய படுத்தின போது, நான் என் தேவனுக்கு விரோதமாய் எப்படி பாவம் செய்வது என்று சொல்லி அந்த வீடடை விடடே ஓடி போனான். காரணம் ஜோசப் தன்னுடைய எஜமானுக்கு உண்மையாக இருந்தபடியாலும் , தேவனை நேசித்த படியாலும் அவன் அந்த பாவத்தை தேவனுக்கு விரோதமாகவும் தன்னுடைய எஜமானுக்கு விரோதமாகவும் செய்யவில்லை.அதனால் தேவன் ஜோசபின் வாழ்க்கையில்  வந்த எல்லா தீமையான காரியங்களையும் நன்மையாக மாற்றி அவனை அவன் வாழ்ந்த அந்நிய தேசத்திலே பிரதம மந்திரியாக உயர்த்தினார்.ஜோசப்பை போல நீங்களும் தேவனுக்கு பிரியமானவற்றை மாத்திரம் செய்து அவரை நேசிக்கும் போது உங்கள் வாழ்க்கையில் நடக்க இருக்கும் தீமைகளை தேவன் நன்மையாக மாற்றி உங்களையும் வாழ்க்கையில் உயர்த்த அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்அல்லேலூயா !தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?