பயப்படாதே , நான் உன்னோடு இருக்கிறேன் Fear not ,I am with you
தேவனுடைய வசனம் சொல்லுகிறது , நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்று ( ஏசாயா 41 : 10 ) கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சிறையிருப்பில் இருக்கும் போது துன்பங்களையும் , வேதனைகளையும் அனுபவித்து கொண்டிருந்த போது அவர்களை உட்சாகபடுத்தும் விதமாக அவர்களுக்கு ஆதரவாக இந்த வசனத்தின் ஊடாக பேசுகிறார்.இன்றைக்கு யார் யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஆண்டவராக தங்களுடைய வாழ்க்கையில் ஏற்று கொண்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாருக்கும் இந்த வார்த்தை பொருந்தும்.எவ்வளவு அழகான , ஆறுதலான வார்த்தை.உங்களை மானிடனாக சிருஷ்டித்த உங்கள் ஆண்டவர் உங்களை பார்த்து சொல்லுகிறார் , நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்று, எவ்வளவு ஆறுதலான வார்த்தை.நானும் என் மனைவியும் இஸ்ரவேல் ஜனங்களை போல் வாழ்க்கையில் ஒரு நெருக்கமான சூழ்நிலைகூடாக கடந்து சென்று கொண்டிருந்த போது அந்த நெருக்கமான சூழ்நிலையை பார்த்து, எங்களுடைய எதிராளியை பார்த்து நாங்கள் பயர்ந்து நடுங்கி கொண்டிருந்த போது தேவன் ‘ நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் ‘என்று இந்த வார்த்தையின் மூலமாய் தான் எங்களோடு பேசி எங்களை விசுவாசத்தில் சோர்ந்து போய்விடாத வண்ணமாக எங்களை உட்சாகபடுத்தி திடப்படுத்தி, பலப்படுத்தி எங்களை அந்த நெருக்கமான சூழ்நிலையில் இருந்து விடுதலை செய்தார்.ஒரு வேளை நீங்களும் இப்படி படட சூழ்நிலைகூடாக பாடுகளுக்கூடாக , வேதனைகளுக்கூடாக கடந்து சென்று கொண்டிருப்பீர்களானால் நீங்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய விசுவாசத்தை , நம்பிக்கையை வைக்கும் போது உங்களையும் தேவன் அந்த சூழ்நிலையில் இருந்து விடுதலை செய்ய அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.உங்களுடைய பிரச்சனைகளை பார்க்கிலும் தேவன் இயேசு பெரியவர்.அதனால் தான் வேத வசனம் சொல்லுகிறது , உலகத்தில் இருப்பவனை பார்க்கிலும் உங்களுக்குள்ளே இருக்கும் இயேசு கிறிஸ்து பெரியவர் என்று.ஆதலால் பிரச்னை மீது உங்களுடைய கவனத்தை செலுத்தாமல் உங்களை சிருஷ்டித்த தேவன் இயேசு மீது உங்களுடைய கவனத்தையும் , நம்பிக்கையையம் வையுங்கள் அவர் ஒரு போதும் உங்களை கை விட மாட்டார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.சகோ.சஞ்ஜீவ் விவேகானந்தராஜா.The word of God says that,Fear not, for I am with you;Be not dismayed, for I am your God.I will strengthen you,Yes, I will help you,I will uphold you with My righteous right hand.(Isaiah 41:10).When the people of Israel were experiencing suffering and pain while in captivity God speaks through this verse.And today this word applies to all who believe in Jesus Christ and accept him as Lord.The Lord who has created you as a mankind says that ,Fear not, for I am with you;Be not dismayed, for I am your God.I will strengthen you,Yes, I will help you,I will uphold you with My righteous right hand. What a beautiful and comforting word it was.Like the people of Israel when I and my wife were going through a difficult time and when we were in fear and trembling at our opponent looking at that difficult situation in our life ,God spoke to us through this word in order to strengthen us so that we do not grow weary in faith.And God delivered us from that terrible situation.May be If you have been going through such a difficult situation and have been through the pain and suffering ,when you place your faith and trust in the Lord Jesus Christ, he is faithful to release you from that situation.God Jesus is bigger than your problems.That’s what the Bible says , he who is in us is greater than the one he who is in the world.Therefore instead of focusing your attention on the problem, put your focus and trust on the Lord who has created you.He will never forsake you. May the Lord Jesus Christ bless you and your family.Bro.Sanjeev Vivekanandarajah.
Comments
Post a Comment