தேவனை எக்காலத்திலும் நம்புங்கள் Trust in God at all times

வேதம் சொல்லுகிறது , எக்காலத்திலும் தேவனை(கடவுளை)நம்புங்கள்(சங்கீதம் 62 :8 ) எக்காலம் என்பது எல்லா காலத்திலும் அல்லது எல்லா சூழ்நிலையிலும் என்று அர்த்தம், அது ஒரு வேளை உங்களுடைய சந்தோஷ  நாட்களாய் இருக்கலாம், அல்லது உங்களுடைய துக்க நாட்களாய் இருக்கலாம், எப்படி படட காலமாய்இருந்தாலும் சரி எக்காலத்திலும் , எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை நம்ப வேண்டும் என்று வேதம் சொல்லுகின்றது.வேத புஸ்தகத்தில் யோபு என்னும் ஒரு மனிதனை குறித்து எழுதபட்டிருக்கு , அவன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகிறவனாகவும் இருந்தான், அதுமாத்திரம் அல்ல , அவன் மிகுந்த செல்வந்தனாக,அநேக மிருக ஜீவன்களை கொண்டவனாக மிகவும் சந்தோஷமாக தன்னுடைய மனைவி மற்றும்பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டிருந்தான் என்று.ஆனால் ஒரு நாள் அவன் தன்னுடைய பிள்ளைகள் , மற்றும் அவனுக்கு இருந்த சொத்துக்கள் எல்லாவற்றயும் இழந்து மிகவும் ஒரு துக்கமான, சோகமான நிலைக்குள் போக வேண்டியதாய் இருந்தது. ஆனால் அவன் எப்படி தன்னுடைய சந்தோஷ நாட்களில் தேவன் மீது  நம்பிக்கை வைத்து இருந்தானோ அதே போலத்தான் தன்னுடைய துயர ,துக்க நாட்களிலும் தேவன் மீது நம்பிக்கை வைத்து, தன்னுடைய இருதய பாரத்தை தேவன் மீது ஊற்றி தேவனையே  அடைக்கலமாக நம்பி இருந்தான்.அவனுடைய வாழ்க்கையின் சூழ்நிலை அவனுக்கு விரோதமாக இருந்தது, ஆனால் அவன் எக்காலத்திலும், எல்லா சூழ்நிலையிலும் தேவனையே சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்தான்.ஆதலால் வேதம் சொல்லுகிறது தேவன் அவனை அந்த துயரமான, துக்கமான சூழ்நிலையில் இருந்து விடுதலை செய்து அவனை இரடடந்தனையாய்ஆசிர்வதித்தார் என்று , காரணம் அவன் தனது எல்லா காலத்திலும் தேவனை நம்பி அவரை அடைக்கலமாக கொண்டிருந்ததினால். நீங்களும் யோபுவை போல் எக்காலத்திலும்  தேவன் இயேசுவை நம்புங்கள், அவர் உங்களை வாழ்க்கையில் வெட்க பட்டு போக விட மாட்டார்.யோபுக்கு நன்மைகள் செய்த தேவன் நிச்சயமாய் உங்களுக்கும் நன்மைகள் செய்ய அவர் உண்மை உள்ளவராக  இருக்கிறார் அல்லேலூயா .ஒரு வேளை நீங்கள் அவரை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக , ரச்சகராக ஏற்று கொள்ளாதிருந்தால் இப்போதே உங்களுடைய வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணியுங்கள் , அவரே உங்களுடைய பாவங்களுக்காக , அக்கிரமங்களுக்காக , மீறுதலுக்காக கல்வாரி சிலுவையில் உங்களுக்காக நொறுக்க பட்டு , அவருடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் பரலோகத்தில் ஜீவிக்கிறார், வேதம் சொல்லுகிறது மீண்டும் அவர் இந்த பூலோகத்துக்கு வந்து அவரை விசுவாசித்து ஆண்டவராக ஏற்று கொண்ட அத்தனை ஜனங்களையும் தன்னோடு பரலோகத்துக்கு எடுத்து செல்வார் என்று.ஆகவே நீங்களும் அந்த பரலோக ராச்சியத்துக்குள் வர வேண்டும் என்பது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அல்லேலூயா தேவன் இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக. சகோ.சஞ்ஜீவ் விவேகானந்தராஜா.The Bible says that , Trust in God at all times (Psalm 62: 8).At all times means , It may be your happy days or may be your sad days.The Scripture tells us to trust in God at all times, under all circumstances.In the Book of Job, a man named Job,He was an upright and righteous man, fearing God and turning away from evil, not only that, but he was very wealthy and had many animals.He was very happy living with his wife and children.But one day he lost his all children and all his possessions and had to go into a very sad and sad state.But just as he trusted in God in his joyful days, so did he in his miserable days.Even in his mourning days, he trusted and poured out his heart on God.So the Bible says that , God delivered him from that sad and miserable situation and he was doubly blessed.Because he trusted in God all his time and had taken refuge in him.Just like Job you too have faith in God,he will not let you go to shame in life.God, who has done good for Job, is sure to do good for you.Hallelujah,If you haven’t  accepted Jesus Christ  as Lord and saviour in your life,commit your life to God right now.He ( Jesus )is the one for your sins, iniquities, and transgressions and shed his holy blood and died on the cross of Calvary and on the third day risen and lives in heaven today,Scripture says that he is coming again to this world and he would take all the people to heaven with him who believed in him and accepted him as Lord.Therefore, it is God’s will for you to enter into that heavenly kingdom.Hallelujah, May God bless you and your family.Bro.Sanjeev Vivekanandarajah.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?