சூறாவளி போன்றதான பிரச்சனையும் இயேசுவும் Hurricane - like problem and Jesus
பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கு , அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக அலைகள் அதின்மேல் மோதிற்று கப்பலின் பின்னணியத்தில் இயேசு தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்கவலையில்லையா என்றார்கள் இயேசு எழுந்து ,காற்றை அதட்டி, கடலைப் பார்த்து இரையாதே, அமைதலாயிருஎன்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று (மாற்கு 4:37- 39 ) பரலோக தேவன் இயேசு தனக்கு பரலோகத்தில் இருந்த அத்தனை மகிமை களையும் விட்டு விட்டு மனித குலத்தின் பாவங்களுக்கு விமோசனம் கொடுக்கும் படி இந்த பூலோகத்தில் சாதாரண மானிடனாக பிறந்தார்.அவர் அப்படி பூலோகத்தில் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் அவர் தன் சீடர்களோடு படகில் சென்று கொண்டிருந்த போது பலத்த புயல் காற்று உண்டாகின போது சீடர்கள் புயல் காற்றை பார்த்து பயந்து படகில் நித்திரை செய்து கொண்டிருந்த இயேசுவை எழுப்பி ஐயா நாங்கள் மடிந்து போவது உமக்கு கவலை இல்லையா என்று கேடட போது இயேசு எழும்பி காற்றை அதட்டி கடலை பார்த்து இரையாதே அமைதலாய் இரு என்ற போது காற்றும், கடலும் யேசுவுக்கு கீழ்படிந்தது. அல்லேலூயா! அதே போல் உங்களுடைய வாழ்க்கையிலும் சூறாவளி போன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. அப்படி சூறாவளி போன்ற பிரச்சனைகள் உங்கள் வாழ்க்கையில் வரும் போது அவட்ரை அமைதி நிலைக்கு கொண்டு வர தேவன் யேசுவினால் மாத்திரம் முடியும் காரணம் உங்களுக்கு வரும் பிரச்சனையை பார்க்கிலும் தேவன் இயேசு பெரியவர். அல்லேலூயா ! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும்,உங்கள் குடும்பத்தையும்ஆசீர்வதிப்பாராக சகோ.சஞ்ஜீவ் விவேகானந்தராஜா.
In the book of Mark, there is an incident written, a great windstorm arose, and the waves beat into the boat, so that it was already filling.But Jesus was in the stern, asleep on a pillow. And they awoke him and said to him. ,Teacher, do You not care that we are perishing? Then Jesus arose and rebuked the wind, and said to the sea, Peace, be still.And the wind ceased and there was a great calm (Mark 4: 37- 39) Heavenly God Jesus left all of his glory in heaven and was born as a man in this world to redeem the mankind from their sins.One day when Jesus was sailing on a boat with his disciples a strong wind blows,the disciples feared the wind and woke Jesus up who was asleep in the boat said , Master you don’t care if we die ? he arose, and rebuked the wind, and said unto the sea, Peace, be still, and the wind ceased, and there was a great calm.Hallelujah! Likethat , you will have to face problems like storms, hurricanes in your life.When such problems as hurricanes come into your life, only God can restore them to peace.Because God Jesus is greater than the problem that causes you.Hallelujah ! May the Lord Jesus Christ bless you and your family. Bro.Sanjeev Vivekanandarajah.
Comments
Post a Comment