இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14 :6 ) நீங்கள் பரலோகம் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீங்களா? ஆம் எல்லாருக்கும் பரலோகம் செல்ல வேண்டும் என்ற விருப்பம், ஆசை இருக்கத்தான் செய்கிறது. நீங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்று நினைகிறேன்.இன்று ஜனங்கள் பரலோகம் செல்ல வேண்டும் என்பதட்க்காக தான தருமங்களை செய்கிறார்கள் , இன்னும் சிலர் தங்களுடைய பாவங்களுக்கு விமோசனம் தேடி புனித ஸ்தலங்கள் புனித ஸ்தலங்களாக ஏறி இறங்குகிறார்கள், இன்னும் சிலர் தங்களுடைய பாவம் நிவர்த்தி செய்யும் படி மிருகங்களை, பறவைகளை கோவில்களுக்கு சென்று பலி கொடுக்கிறார்கள் ஆனால் இவற்றை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அதட்க்காக தான தர்மங்கள் செய்வது பிழை என்றோ , செய்ய வேண்டாம் என்றோ சொல்லவில்லை. செய்வது நல்லது தான், ஆனால் உங்களுடைய தான தர்மங்கள், உங்களுடைய நட்கிரிகைகள் உங்களை ஒரு போதும் பரலோகத்துக்கு உங்களை எடுத்து செல்லாது.அப்படி என்றால் எப்படி பரலோகம் செல்வது என்று நினைக்கிறீங்களா? இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை, விசுவாசத்தை வையுங்கள். அவரே வழியும் , சத்தியமும்,ஜீவனுமாய் இருக்கிறார், பரலோகம் செல்ல ஒரே வழி இயேசு மாத்திரமே, ஒரு பலியும் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. உங்களுடைய பாவங்களுக்கு விடுதலை கொடுக்கும் படி தான் இந்த பூலோகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பிறந்து ஒரு ஆட்டுகுட்டியாக அடிக்கப்பட்டு, கல்வாரி சிலுவையில் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி, மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, இன்றும் பரலோகத்தில் ஜீவிக்கிறார்.அவர் மனித குலத்தின் பாவத்துக்கான விலை கிரயத்தை கல்வாரி சிலையில் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி செலுத்தி விடடார். எத்தனை அன்புள்ள தெய்வம் உங்களுடைய பாவங்களுக்காக அவர் ஆட்டு குட்டியாக அடிக்க படட படியால் எந்த பலியும் நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. மாறாக உங்களுக்காக அடிக்க படட தெய்வம் இயேசு மீது உங்கள் நம்பிக்கையை, விசுவாசத்தை வைத்து அவரை ஆண்டவராக, இரச்சகராகஉங்கள் வாழ்க்கையில் எற்று கொண்டு அவருடைய வார்த்தைக்கு கீழ் படிந்து தேவ நீதியை நீங்கள் நிறைவேற்றும் போது உங்களுக்கும் பரலோக ராஜ்யத்துக்குள் செல்ல தேவன் இயேசு உதவி செய்வார்.அல்லேலூயா ! ஆண்டவராகிய இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா
Comments
Post a Comment