உங்களை விசாரிக்கும் தேவன்

இயேசு உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் ( 1 பேதுரு 5 :7 ).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம்.பிரியமானவர்களே, உங்களை யாருமே விசாரிப்பதில்லை என்று கவலைபடுகிறீங்களா? உங்களை விசாரிக்க தேவன் இயேசு இருக்கிறார், அவர் உங்களை விசாரிக்கிறவர். ஆகவே உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்து விட்டு அவர் உங்களை விசாரிக்கிறவர் என்னும் சிந்தனை உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் பதிந்திருக்க வேண்டும்.அவர் அவரை நம்பின ஜனங்களை கை விடுவதில்லை, அவரே ஒவ்வொருவரையும் ஆதரிப்பவர், விசாரிப்பவர்  அவரே ஒவ்வொருவருக்கும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கொடுக்கிறவர்.ஆகையால் வேத வசனத்துக்கு கீழ் படிந்து உங்கள் கவலைகள், கண்ணீர்களையெல்லாம் தேவன் இயேசு மீது வைத்து விடுங்கள், அவர் உங்களை கை விட்டு விலகி போகிற தேவன் இல்லை, அவர் உங்களை விசாரிப்பார், உங்களுடைய தேவைகளை சந்திப்பார், உங்களுடைய கவலைகளை நீக்குவார், உங்கள் கண்ணீர்களை துடைப்பார்.நீங்க செய்ய வேண்டியது, தேவன் இயேசு மீது உங்களுடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வைத்து உங்கள் கவலைகளை அவர் மீது இறக்கி போடுவதுதான் , அவர் உங்களை விசாரிப்பார், உங்கள் தேவைகளை சந்திப்பார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?