மறு உத்தரவு கொடுக்கும் தேவன்

கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்(சங்38:15).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! இந்த விண்ணப்பமானது இஸ்ரவேல் தேசத்தை 40 வருடங்கள் ஆட்சி செய்த தாவீது இராஜாவினால் ஏறெடுக்கப்பட்ட்து. தாவீதுக்கு அவருடைய சத்துருக்கள் மூலமாய் அநேக பாடுகளும், பிரச்சனைகளும், வேதனைகளும், நெருக்கங்களும் உண்டாயிற்று, அவருடைய சத்துருக்கள் அவரை காயப்படுத்துகிறார்கள் அவரது மனதை துக்கப்படுத்துகிறார்கள் , அவருக்கு அநியாயம் செய்கிறார்கள் ஆனால் தாவீது இவை எல்லாவட்ரிட்க்கும் மத்தியிலும்  கர்த்தருடைய சமூகத்தில் சமாதானமாய் இருக்கிறார், யாராலும் அவரை கர்த்தரிடம் இருந்து பிரிக்க முடியவில்லை.தனக்கு தீங்கு செய்தவர்களுக்கு தானும் பதிலுக்கு பதில் செய்ய வேண்டும், அவர்களை பழி வாங்க வேண்டும் என்ற சுபாவம் அவரிடம் இருக்கவில்லை.அவர் எல்லாவற்றயும் கர்த்தரிடத்தில் ஒப்புவித்து விட்டு விசுவாசத்தோடு கர்த்தர் தனக்கு மறு உத்தரவு கொடுப்பார் என்று கர்த்தருக்காக காத்து இருக்கிறார்.அதே போல் உங்களுக்கும் யாராவது தீங்கு செய்தால், உங்களுக்கு விரோதமாக காரியங்களை செய்தால் நீங்களும் தாவீதை போல் எல்லாவற்றயும் விசுவாசத்தோடு கர்த்தருக்கு ஒப்புவித்து விடுங்கள், தாவீதை வெட்கப்படுத்தாத தேவன் நிச்சயமாய் உங்களையும் வெட்கப்படுத்தமாட்டார். நிச்சயமாய்  உங்களுக்கு மறு உத்தரவு கொடுப்பார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?