நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்

துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார் (நீதி 3 :33).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! நீதிமான்களுக்கு கர்த்தருடைய ஆசிர்வாதமுண்டு, கர்த்தர் நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை ஆசீர்வதிக்கிறார். நீதிமான்களுடைய வாசஸ்தலம் சாதாரண குடிசையாக  இருந்தாலும் அந்தக்   குடிசையையும் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டிக்கிறது. நீதிமான்  தன்னுடைய வாசஸ்தலத்தில் சந்தோஷமாக வாசம் பண்ணுவான். கர்த்தர் அவனுடைய வீட்டின் எல்லா பகுதிகளையும் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் நீதிமானுடைய வாசஸ்தலத்தை தன்னுடைய சந்தோஷத்தினாலும் , ஆசிர்வாதத்தினாலும் நிரப்புகிறார். நீதிமானுடைய மாப்பிசைகிற தொட்டியும், அவனுடைய எண்ணெய்யும், களஞ்சியமும் கர்த்தரால் ஆசிர்வதிக்க பட்டிருக்கும். துன்மார்க்கருடைய வீட்டிலோ கர்த்தருடைய சாபம் இருக்கும். அவனுடைய வீட்டில் வியாதியும், வேதனையும், குழப்பமும், பயமும், குறைச்சலும், சாமாதானமின்மையும் இருக்கும்.அவனுடைய வீடு பெரிய மாளிகையாக காட்சியளித்தாலும் அவனுடைய வீடு கர்த்தரால் சபிக்கப்படட வீடு அங்கே சந்தோஷமோ, சமாதானமோ, நிம்மதியோ இருக்காது, துன்மார்க்கனுக்கு சரியான நித்திரை வராது, பயமும், திகிலும் எப்போதும் அவனை சூழ்ந்து இருக்கும். நீதிமானுடைய நித்திரையோ இன்பமாயிருக்கும். கர்த்தருடைய சத்தத்துக்கு செவி கொடுத்து துன்மார்க்கத்தை விட்டு விலகுங்கள். அல்லேலூயா! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?