முற்கோபி மதிகேட்டைச் செய்வான்

முற்கோபி மதிகேட்டைச் செய்வான் ( நீதி 14 : 17 ).பிரியமானவர்களே , முற்கோபமுள்ளவன் சாதாரண காரியத்துக்கும் கோபப்பட்டு தன்னுடைய மதிகேடடை வெளிப்படுத்துகிறான். இவனுடைய சிந்தனையில் தடுமாற்றம் இருக்கும், இவனுடைய இருதயம் தெளிவில்லாமல் குழப்பத்தில் இருக்கும், இவனால் தன்னுடைய கோபத்தையும் அடக்க முடியாது , தன்னுடைய மதிகேடடையும் அடக்க முடியாது. தான் ஒரு மதிகேடன் என்பது இவனுடைய முற்கோபத்தினால் வெளிப்படும். இவன் தன்னைத்தானே அவமானப்படுத்துகிறான் . தன்னுடைய மதிகேடு வெளிப்படும் போது தான் தான் கோபபடடதற்றகாக வருத்தப்படுவான். வேத வசனம் சொல்லுகிறது , கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான் ( நீதி 15 :18 ) என்று. ஒருவேளை நீங்கள் ஒரு முற்கோபியாக இருப்பீர்களானால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் உங்களுடைய முற் கோபத்தை அடக்க உதவி கேளுங்கள் , நிச்சயமாக உங்களுடைய பலவீனத்தை மேட்கொள்ள தேவன் உதவி செய்வார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?