என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் ( எரேமியா 33 :3 ). பிரியமானவர்களே ! நீங்கள் வாழ்க்கையில் பாடுகளுக்கூடாக , உபத்திரவங்களுக்காக, நிந்தைகளுக்கூடாக , அவமானங்களுக்கூடாக செல்லும் போது மனிதனை நோக்கி பார்ப்பதை விட்டு வானத்தையும் , பூமியையும் சிருஷ்டித்த , உங்களை சிருஷ்டித்த உங்கள் பரலோக தேவன் இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள், அவரே உங்களுக்கு சொல்லியிருக்கார் ‘என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் ‘ என்று. வாக்கு கொடுத்த தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார், அவர் உங்களிடம் எதிர்பார்க்கிறது நீங்கள் அவரை நம்பி அவரை நோக்கி கூப்பிட வேண்டும் , நீங்கள் அவரிடம் வர வேண்டும் என்பது தான் அப்போது அவர் நீங்கள் அறியாததும் உங்களுக்கு எடடாததுமான பெரிய காரியங்களை செய்வார்.அல்லேலூயா! தேவன் இயேசு உங்களையும் ,உங்கள்குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா
Comments
Post a Comment