ஒன்றுக்குங்கவலைப்படாமல், உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்.

நீங்கள்ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்  குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் ( பிலி 4 :6 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம், பிரியமானவர்களே ! நாம் நம்முடைய விண்ணப்பங்களை தெரிய படுத்தினால் தான் தேவனுக்கு தெரியும் என்று நினைத்து விடக்கூடாது, தேவன் சர்வ ஞானமுள்ளவர், நாம் அவருடைய சமூகத்தில் வேண்டி கொள்ளுவதட்கு முன்பாகவே நம்முடைய தேவைகள் என்ன என்பதை தேவன் அறிந்திருக்கிறார், ஆனாலும் நம்முடைய தேவைகளைபற்றி நாம் அவருக்கு  தெரியப்படுத்த வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.நம்முடைய சூழ்நிலை எப்படியாக இருந்தாலும்  தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒன்றுக்கும் கவலைப்படக்கூடாது, என்ன நடக்குமோ, எது நடக்குமோ என்று பரிதபிக்கக்கூடாது, பொறுமையை இழந்து பரபரப்பாக இருக்கக்கூடாது, வேதனைகளும், கஷ்டங்களும், பிரச்சனைகளும் வரும் போது சோர்ந்து போய் கவலையில் மூழ்கி போய் விடாமல் ஜெபத்தின் மூலமாய் தேவனுடைய வழிநடத்துதலை நாடி, நாம் கர்த்தருக்குள் நிலைத்து இருந்து நம்முடைய விசுவாசத்தை காத்துக்கொள்ள வேண்டும்.அல்லேலூயா ! மற்றும் தேவனுடைய சமூகத்தில் நாம் ஜெபம் பண்ணும் போது, தேவன் நம்முடைய தேவைகளை சந்திக்க வேண்டும் என்று ஜெபத்தில் கேடடால் மாத்திரம் போதாது, ’விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ என்று வேத வசனம் கூறுவதினால் விண்ணப்பங்களை ஸ்தோத்திரங்களோடு ஏறெடுக்க வேண்டும். அல்லேலூயா ! நீங்கள் அப்படியாக வேத வசனத்துக்கு கீழ் படிந்து ஒன்றுக்குங் கவலைப்படாமல் , எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்தும் போது தேவனுடைய உள்ளம் மகிழ்வது மாத்திரமல்ல உங்களுடைய விண்ணப்பத்துக்கு அவருடைய சித்தத்தின் படியாக பதில் கொடுக்க தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார்.ஆமென் ! தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?