தனிமையானவர்களுக்கு, கட்டுண்டவர்களுக்கு உதவி செய்யும் தேவன்

தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் ( சங் 68 :6 ).  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம், பிரியமானவர்களே ! தேவன் தனிமையானவர்களுக்கு வீடு வாசல் ஏற்படுத்தி கொடுத்து தனிமையில் வாடுபவர்களுக்கு குடும்ப உறவுகளை உண்டுபண்ணுகிறார், அவர் அந்நிய தேசங்களில் அகதிகளாக சுற்றித் திரிபவர்களுக்கு அடைக்கலமாக இருக்கிறார், அவர்கள் வாசம் பண்ணுவதுக்கு வீடுவாசல்  ஏற்படுத்தி தருகிறார், வாழ்வதட்ட்க்கு வழியில்லாமல் இருப்போரை தேவன் கரிசனையோடு நோக்கிப் பார்க்கிறார், உதவி தேவைப்படுகிறவர்களுக்கு தேவன் உதவி செய்கிறார், வேலையற்றவர்களுக்கு வேலை கொடுக்கிறார், நம்முடைய ஜீவியத்துக்குத் தேவையான போஜனங்களை சம்பாதிப்பதட்ட்க்குத்  தேவையான தொழில்களையும் , பணத்தையும் , சலுகைகளையும், பெலத்தையும் கொடுக்கின்றார். தேவனே நம்முடைய வாழ்வுக்கு ஆதாரமாய் இருக்கின்றார். அல்லேலூயா ! உங்களுடைய  குடும்பங்களுக்கும் தேவனே அஸ்திபாரமாக இருக்க வேண்டும், அவரே கன்மலையான  அஸ்திபாரம். ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பங்களை கர்த்தர் மீது கட்டி எழுப்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.தேவன் நீதியுள்ளவர், கட்டுண்டவர்களை அவர் விடுதலையாக்குகிறார். அநீதியாக கடடப்பட்டிருக்கிறவர்களுக்கு தேவனுடைய சமூகத்தில் நீதியான விடுதலை உண்டு.கர்த்தர் கட்டு அவிழ்க்கும் போது அதை யாராலும் கடட முடியாது, தேவன் ஒருவரை விடுவிக்கும் போது அந்த நபரை எந்த சங்கிலிகளாலும் கட்டி அடிமை படுத்த முடியாது. தேவனுடைய கிரியைகள் பயங்கரமானவைகள், அவர்கட்டுண்டவர்களை தம்முடைய வல்லமையினால் விடுதலையாக்குகிறார். அல்லேலூயா. தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?