நித்திய ஜீவனை அளிக்கும் தேவன்

நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு (சங் 68 :20 ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம், பிரியமானவர்களே ! மனுஷருக்கு முன்பாக நன்மையையும், தீமையும், ஜீவனும், மரணமும், ஆசிர்வாதமும், சாபமும் வைக்கப்பட்டிக்கிறது.இவற்றில் எவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்க தான்  தீர்மானிக்க வேண்டும்.விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்( மாற்கு 16 :16  ) என்று வேத வசனம் கூறுகிறது.நம்முடைய தேவன் இயேசு , நமக்கு இரட்சிப்பை அருளும் தேவனாய் இருக்கிறார். ஆண்டவராகிய இயேசுவினால் மரணத்துக்கு நீங்கும் வழிகளுண்டு, அவர் மீது விசுவாசம் வைத்து அவரை ஏற்று கொண்டு தேவ நீதியை நிறைவேற்றும் ஒவ்வொரு  பிள்ளைகளுக்கும் தேவன் நித்திய ஜீவனை கொடுக்க உண்மை உள்ளவராக இருக்கிறார். தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?