”தேவன் இல்லை" என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்

“தேவன் இல்லை" என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான் (சங் 14 : 1 ). தேவன் இல்லை என்று சொல்பவனை வேதம் மதிகேடன் என்று சொல்லுகிறது. கர்த்தருக்கு பயப்படும் பயம் ஜனங்களுக்கு இல்லை அதனால் தான் துணிகரமாக தேவன் இல்லை என்று சொல்லுகிறார்கள். இவர்கள் தங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிக்கொள்ளுவதில் பெருமை படுகிறார்கள்.தேவன் இல்லை என்பதுதான் இவர்களுடைய நம்பிக்கை, தேவனைப் பற்றிய சிந்தனையே இவர்களுக்கு இல்லை, பெற்றோர் தான் தங்களை உருவாக்கினது என்று அடித்து சொல்லுவார்கள். விஞானமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் இதுக்கு காரணமா? இன்று மாத்திரம் அல்ல தாவீதின் நாட்களிலும் நாஸ்திகர்கள் இருந்தார்கள், ஜனங்களுடைய இருதயம் கடினப்பட்டு இருப்பதினால் அவர்களால் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேதம் சொல்லுகிறது கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று.தேவன் தாமே தேவன் இல்லை என்று சொல்லும் ஜனங்களின் மனக்கண்ணை திறப்பாராக. ஆமென். கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்