கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது(சங்145:9).பிரியமானவர்களே ,கர்த்தர் தாம் சிருஷ்டித்த ஒவ்வொருவர் மேலும் தயவுள்ளவராக இருப்பதோடு , ஒவ்வொருவருடைய பாவங்களையும் மன்னித்து அவருடைய இரக்கங்களையும் காண்பிக்க ஆயுதமாகவும் இருக்கிறார்.அவர் பச்சபாதம் பார்ப்பதில்லை. எல்லா மனித குலத்தின் மீதும் அவர் தயவுள்ளவராகவும், அன்புள்ளவராகவும் , இரக்கங்கள் உள்ளவராகவும் இருக்கின்றார். அவருடைய இரக்கங்கள் தான் இன்று ஒவொருவரையும் வாழ வைக்கின்றது.கர்த்தர் இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை வைத்து அவரை உங்களுடைய ஆண்டவராக , சொந்த ரச்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.அவர் உங்களை ஒரு போதும் கை விடமாட்டார். தேவன் இயேசு உங்களையும் ,உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ.சஞ்ஜீவ் விவேகானந்தராஜா
Comments
Post a Comment