நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் ( யாத்தி 15 : 26 ). பிரியமானவர்களே , கர்த்தர் தம்மை வெளிப்படுத்தும் போது தன்னை ஒரு பரிகாரியாக கூறுகிறார்.ஆம் அவரின் பெயர் ஜெகோவா ராப்பா அதன் அர்த்தம் குணமாக்கும் கர்த்தர்.அவர் மருத்துவருக்கெல்லாம் மருத்துவர் , அவர் தான் மருத்துவர்களையும் சிருஷ்டித்த தேவன், மருத்துவர்களுக்கு ஞானம் கொடுப்பவரும் அவரே.அவர் மருத்துவர்களை கொண்டு நோய்களை குணப்படுத்துகிறார் சில சந்தர்ப்பங்களில் எந்த மருந்துகளையும் , எந்த மருத்துவர்களையும் பயன்படுத்தாமல் தன்னுடைய சுகமளிக்கும் வல்லமை உள்ள கரத்தினால் நோய்களை குணப்படுத்துகிறார். என்னுடைய மனைவிக்கு ‘தைரொக்ஸினின்’ இருந்ததது, மருத்துவர்கள் சொன்னார்கள் தைரொக்ஸினை குணப்படுத்த முடியாது , உங்களுக்கு குழந்தை பெறுவதட்க்கான வாய்ப்பும் மிகவும் குறைவாக இருக்குது ஆதாலால் life time மருந்தை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள் , ஆனால் என்னுடைய மனைவியோ மருத்துவர் கொடுத்த மருந்தை உட்க்கொள்ளுவத்தை நிறுத்தி விட்டு தேவனே நீர் தான் என்னுடைய ஜெகோவா ரப்பா சுகமளிக்கும் தேவன் என்று அவர் மீது நம்பிக்கை வைத்த போது தேவன் தைரொக்ஸினை குணப்படுத்தின மாத்திரம் அல்ல இரண்டு குழந்தைகளையும் கொடுத்து எங்களை ஆசிர்வதிர்த்து இருக்கிறார். இதனால் நான் உங்களை மருத்துவர்களிடம் செல்ல வேண்டாம் என்றோ , மருந்துகள் பாவிக்க வேண்டாம் என்றோ சொல்லவில்லை.நீங்கள் மருத்துவர்களிடம் செல்வதும் , மருத்துகள் பாவிப்பதும் நல்லது தான் ஆனால் உங்களுடைய நம்பிக்கையை மருத்துவர்கள் மீதோ , மருந்துகள் மீதோ வைக்காமல் , மருத்துவர்களையும் உருவாகின சர்வ வல்லமை உள்ள தேவன் மீது வைக்கும் போது தேவன் உங்களுடைய வாழ்க்கையில் ஜெகோவா ரப்பாவாக இருந்து உங்களுக்கு சுகத்தை கொடுக்க அவர் வல்லமை உள்ளவராகவும் உண்மை உள்ளவராகவும் இருக்கிறார்.தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா
Comments
Post a Comment