தேவனே நமது அடைக்கலம் , பெலன் , அனுகூலமான துணை

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர் ( சங் 46 :1 ).தேவனுடைய வசனம் சொல்லுகிறது ,முதலாவது தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார், இரண்டாவது  தேவன் நமக்கு பெலனாக இருக்கிறார் , மூன்றாவது தேவன் நமக்கு ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையாக இருக்கிறார் என்று. நமக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் ,நெருக்கங்கள்,உபத்திரவங்கள் வரும் போது தேவன் நமக்கு அடைக்கலமாக அதாவது  அவர் நமக்கு பாதுகாப்பாக  இருக்கிறார்.மற்றும் இழப்பு ,துயரம், துக்கம் நேரிடும் போது அவற்றை தாங்கிக் கொள்ள தேவையான பெலன் இல்லாமல் சோர்ந்து போகிறோம், அப்படி சோர்ந்து போகும் போது தேவன் நமக்கு இழப்பை ,துயரத்தை தாங்கி கொள்ளத் தேவையான பெலத்தை தருகின்றார் . மேலும் ஆபத்து காலத்தில் தேவன் தாமே நமக்கு துணையாக நின்று ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவி செய்கிறார். அல்லேலூயா ! ஆண்டவர் இயேசுவை உங்களது வாழ்க்கையில் நீங்கள் ஆண்டவராக ஏற்று கொள்ளாது இருப்பீர்களானால்  கால தாமதம் பண்ணாமல் இப்போதே உங்களை அவருக்கு அர்ப்பணித்து இயேசுவை உங்களது ஆண்டவராக, ரச்சகராக ஏற்று கொள்ளுங்கள். தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக. சகோ . சஞ்ஜீவ் விவேகானந்தராஜா

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?