ஜெயம் கொடுக்கும் தேவன்

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் (நீதி 21 : 31).ஆம் பிரியமானவர்களே, குதிரைகளும், குதிரை வீரர்களும், ரதங்களும் யுத்த நாட்களுக்காக ஆயத்தமாக்கபடுகின்றன , அப்படி யுத்தத்துக்காக ஆயத்தப்படுத்த வேண்டியது அவசியம் தான் ஆனால் யுத்தத்துக்கு ஆயத்தமாக்கப்படும் குதிரைகளோ ,ரதங்களோ  வீரர்களின் திறமைகளோ , அவர்களுடைய பலமோ அல்லது அவர்கள் செய்த பயிச்சியோ யுத்தத்தில் ஜெயத்தை கொண்டு வராது , மாறாக கர்த்தர் கொடுத்த பெலத்துக்காக, அவர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு  நன்றி செலுத்தி அவர் மீது நம்பிக்கை வைத்து யுத்தத்துக்கு செல்லும் போது அவரிடம் (கர்த்தரிடம்) இருந்து ஜெயம் வருகின்றது.அதே போல் நீங்கள் இந்நாட்களில் பரீச்சைக்கு செல்லும் முன் அல்லது வேலை நேர் முக தேர்வுக்கு செல்லும் முன் எப்படியாக யுத்த வீரர்கள்  தங்களை யுத்தத்துக்கு ஆயப்படுத்துகிறார்களோ அதே போல் நீங்கள் உங்களுடைய பரீச்சைக்காக , interviewக்கு உங்களை ஆயத்தப்படுத்தி கர்த்தர் உங்களூக்கு கொடுத்த ஞானத்துக்காக, அறிவுக்காக ,திறமைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்தி உங்களுடைய பரிட்சையில் அல்லது interviewஇல் attend பண்ணும் போது உங்களூக்கு ஜெயம் கர்த்தரிடம் இருந்து வரும்.அல்லேலூயா ! தேவன் இயேசுவை அறிந்த ஒவ்வொரு தேவ பிள்ளைகளும் அப்படியாக தேவனை சார்ந்து வாழ கற்று கொள்ள வேண்டும்.ஜெயம் கர்த்தரிடம் இருந்து வருகின்றது.ஆமென் கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ.சஞ்ஜீவ் விவேகானந்தராஜா

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?