நம் ஒவ்வொருவருடைய சுவாசத்தையும் தம் கையில் வைத்திருக்கும் கர்த்தர்

தம்முடைய கையில் நமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும் ( தானி 5 :23 ).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே ! கர்த்தரே  நம்முடைய ஜீவனுக்குச் சொந்தக்காரர், நம்முடைய காலங்கள் அவரின் கரத்திலே இருக்கின்றது. அவர் நம் ஒவ்வொருவருடைய சுவாசத்தையும் தம்முடைய கையில் வைத்து இருக்கிறார். கர்த்தர் நம்மை சிரிஷ்டித்தது மாத்திரம் அல்ல தம்முடைய ஜீவ சுவாசத்தை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார், அவர் தம்முடைய ஜீவ சுவாசத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளும் போது நம்முடைய ஜீவனும் நம்மை விட்டு போகின்றது. பிரியமானவர்களே ! நீங்கள் ஜிம்முக்கு சென்று உங்களுடைய உடலை திடகாத்திரமாக வைத்து இருக்கலாம் ஆனால் உங்களுடைய சுவாசம் கர்த்தருடைய கரத்தில் தான் இருக்கின்றது, அவர் ஆப் பண்ணிடடா நீங்க அவுட். ஆகவே ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஆயுசை கூட்டி கொடுக்கின்ற தேவனுக்கு மறவாமல் நன்றி செலுத்த வேண்டும். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?