நன்மையை வழங்கும் தேவன்

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர் கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்( சங் 84:11). இந்த பிரபஞ்சத்தில் வாழும் ஜனங்கள் அந்தகார இருளில் வாழ்கிறார்கள் , அவர்களுக்கு அநேக ஆபத்துக்கள் உண்டு, இயேசுவை யார் யாரெல்லாம் தேவனாக ஏற்று கொள்ளுகிறார்களோ அவர்களுக்கு இயேசு சூரியனாக இருந்து அவர்களை வெளிச்சத்தின் பாதையில் நடத்துவதோடு அவர்களுக்கு அவர் பாதுகாப்பின் கேடகமாகவும்  இருக்கின்றார். மற்றும் தேவன் இயேசு, தன்னை ஆண்டவராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு கிருபையையும், மகிமையையும் அருளுகிறார். அதாவது அவர் அவர்கள் மீது வைத்திருக்கின்ற நல்ல நோக்கங்களும்,அவர் அவர்களுக்குள் செய்கின்ற நட்கிரிகைகளும் தேவனுடைய  கிருபைகளாகும்.தேவன் அவர்களை மகிமை படுத்தும் போது அவர்களை தன்னுடைய பிள்ளைகளாக அங்கீகரித்து அவர்களுக்கு கனத்தையும், மேன்மையையும் கொடுப்பதோடு, பரலோகத்தில் அவரோடு நித்தியமாக வாழும் நித்திய வாழ்க்கையையும் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார் என்பது, தேவன் தன்னை ஆண்டவராக ஏற்று கொண்ட அவருடைய பிள்ளைகளுக்கு இந்த பிரபஞ்சத்தில் வைத்திருக்கும் நன்மைகளைக் குறிக்கும்.உத்தமமாய் நடப்பவர்களை அவர் வெட்க படுத்துவதில்லை, அவர்களுக்கு எப்போது எது வேண்டும் என்பதை அறிந்திருப்பதோடு அவர்களுடைய தேவைகளையும் ஏற்ற வேளைகளில் சந்திக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?