என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி 31 : 14 b ) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை கர்த்தர் இந்த புதிய வருடத்தில் உங்களுக்கு வாக்குத் தத்தமாகக் கொடுக்கின்றார். கர்த்தர் சொல்லுகிறார் `என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் ‘ என்று . அல்லேலூயா ! கர்த்தருடைய வார்த்தையை அப்படியே நீங்கள் விசுவாசித்து, அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்துக்காகக் கர்த்தருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்துங்கள். நிச்சயமாக கர்த்தருடைய நன்மையான கரம் உங்கள் வாழ்க்கையில் அமர்ந்து இருப்பதையும், அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதையும் நீங்கள் காண்பீர்கள். அவர் உங்களுக்கு நன்மையானதை இந்த வருடத்தில் தருவார், அதனால் நீங்கள் திருப்தியாவீர்கள். அல்லேலூயா ! வாக்குக் கொடுத்த அவர் தனது வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவராக இருக்கிறார். இதுவரை காலமாக உங்கள் வாழ்வில் நீங்கள் காத்திருந்த ...
Amen
ReplyDelete