கூப்பிடுதலை கேட்க்கும் தேவன்

வேத வசனம் சொல்லுகிறது , கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.( சங்கீதம் 40:1 ) வாழ்க்கையில் பொறுமை வேண்டும்.வேத வசனமே சொல்லுகிறது கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் என்று, ஏன் என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சினை என்று கலங்கி போய் இருக்கிறீங்களா?, எப்போது எனது குடும்ம்ப பிரச்சினை தீரும், என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கிறீங்களா? கவலையே படாதிங்கே, உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் குறித்து தேவன் இயேசு மிகவும் அக்கறையோடு , கரிசனையோடு இருக்கார் உங்களை மிகவும் நேசிக்கிறார்.அவர் எல்லாவற்றயும் பார்த்து கொண்டு தான் இருக்கார் உங்களை  அவர் கை விட மாட்டார்,ஒரு வேளை நீங்கள் நம்பின மனுஷர்கள் உங்களை கை விட்டு இருக்கலாம், உங்களுக்கு ஒரு காரியத்தை குறித்து வாக்கு கொடுத்து விட்டு அதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் உங்களை சிருஷ்டித்த தேவன் உங்களை மறக்கவே இல்லை, உங்களை கைவிடமாட்டார்.நீங்க செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் தேவன் இயேசு மீது உங்களுடைய விசுவாசத்தை , நம்பிக்கையை வைத்து பொறுமையுடன் அவருக்காக காத்து இருப்பது தான், நிச்சயமாய் உங்கள் பக்கமாய் சாய்ந்து உங்கள் கூப்பிடுதலை கேட்டு உங்களை விடுவிப்பார்.அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?