சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக் 1 :12 ).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! மனுஷருக்கெல்லாம் சோதனைகள் வரும், வாழ்க்கையில் சோதனைகள் வரும் போது நாம் சோர்ந்து போகிறோம்.ஆனாலும் சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்.சோதிக்க படுகிற மனுஷன் பாக்கியவான் அல்ல சோதனையை சகிக்கிற மனுஷனே பாக்கியவான்.சோதனையினால் ஒருவனுடைய வாழ்வு அழிந்து போவதில்லை.சோதனையினால் வேதனை உண்டாகலாம் ஆனாலும் நாம் சோதனையை சகித்து விசுவாசத்தின் பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டும்.சோதனையை சகித்து உத்தமனென்று விளங்கினபின்பு அவன் கர்த்தரால் மேன்மை படுத்தபடுவான்.கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஜீவ கிரீடத்தை வாக்கு பண்ணியிருக்கிறார். நீதியாக பாடுகளை அனுபவிக்கிறவர்கள் ஜீவ கிரீடத்தை பெற்றுக்கொள்ளுவார்கள்.துன்மார்க்கமாக ஜீவித்து வேதனையை அனுபவிக்கிறவர்களுக்கு ஒரு ஆசிர்வாதமும் கிடைக்காது.நம்முடைய சோதனை எதனால் உண்டாயிற்று என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.நாம் கர்த்தரிடத்தில் முழு மனதோடும், முழு இருதயத்தோடும் ,முழு ஆத்துமாவோடும் அன்பு கூற வேண்டும்.கர்த்தர் தம்முடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு மாத்திரமே ஜீவ கிரீடத்தை வாக்கு பண்ணியிருக்கிறார். பிரியமானவர்களே !கர்த்தரிடத்தில் அன்பு கூறுங்கள்,அவர் உங்களுடைய பாவங்களுக்காக , உங்களுடைய அக்கிரமங்களுக்காக ,உங்களுடைய மீறுதலுக்காக கல்வாரி சிலுவையில் அடிக்கப்பட்டு தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி தன்னுடைய ஜீவனையே உங்களுக்காக விட்டு, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து ஜீவிக்கிறாரே அவர் மீது அன்பு கூறுங்கள்.கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?