ஜெயம் மனிதரிடம் இருந்து அல்ல தேவனிடம் இருந்து வருகின்றது

வேதம் சொல்லுகிறது , கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது ( சங்     75 : 6 ) இந்த பிரபஞ்சத்தின் ஜனங்களுக்கு தேவனைக் குறித்து , பரலோகத்தைக் குறித்து ஞானமில்லை அதனால் தான் தேவனை நோக்கி பார்ப்பத்துக்கு பதிலாக கிழக்கிலும் , மேற்கிலும், வனாந்திர திசையையும் நோக்கி பார்க்கிறார்கள்.வனாந்திர திசை என்பது தெற்கு திசையை குறிக்கும்.இங்கு வடக்கு திசையை பற்றி சொல்லப்படவில்லை, வடக்கு திசையை நோக்கி தான் எருசலேமில் தேவனுடைய ஆலயம் இருக்கிறது.இங்கே ஜனங்கள் தேவனை நோக்கி பார்ப்பார்த்துக்கு பதிலாக மனிதர்களை நோக்கி பார்க்கிறார்கள். வானத்தையும் பூமியையும் படைத்த தேவனிடம் இருந்து தான் உதவிகள்,உயர்வுகள் , ஆசீர்வாதங்கள் வருகின்றன.அதனால் தான் தேவனுடைய வசனம் சொல்லுகிறது , கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையில் இருந்து ஜெயம் வராது என்று.பிரியமானவர்களே இன்றைக்கு  உங்களுடைய வாழ்க்கை சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருப்பதினால் காரியம் சித்தியாக வாய்ப்பே இல்லை என்று நினைத்து தேவனை மட்டுபடுத்தி விடாதீங்க.உங்கள் சூழிநிலைகளை மாற்றி ஜெயத்தை கொடுக்க உங்களை சிருஷ்டித்த தேவனால் முடியும், அவரால் முடியாத காரியம் ஒன்றுமே இல்லை.ஆகவே நீங்கள் கிழக்கில், மேற்கில் , தெக்கில்  , வடக்கில் இருக்கின்ற மனிதர்களை நோக்கி பார்க்காமல்  உங்களை சிருஷ்டித்த தேவனை நோக்கி பாருங்கள் , ஜெயம் அவரிடம் இருந்து தான் வருகின்றது.தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?