மன்னிக்கும் இருதயம்

தேவனுடைய வசனம் சொல்லுகிறது ,அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே (நீதி 24:29) ஆகவே பிரியமானவர்களே, யாராவது உங்களுக்கு தீங்குஅல்லது உங்களுக்குவிரோதமாய் காரியங்களை செய்திருந்தால் நீங்கள் அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும்அவனுக்குச் சரிக்கட்டுவேன்என்று நீங்கள் சொல்லாமல்,உங்களுடைய இருதயத்தில் இருந்து பழிவாங்கும் எண்ணத்தை அகற்றி விட்டு அந்த நபரை அல்லது நபர்களை மன்னித்து அவர்களை நேசிக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுவை  கல்வாரி சிலுவையில் அறைந்த போது கூட பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று கூறினார்.அவன் எனக்கு செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன் அவன் செய்த செய்கைக்கு தக்கதாக நானும் அவனுக்கு சரிகட்டுவேன் என்று கூறவில்லை மாறாக அவர்களை மன்னித்தார்.ஆகவே நாங்களும் ஆண்டவர்இயேசு மன்னித்தது போல நமக்கு தீமை செய்தவர்களை நாமும் மன்னித்து அவர்களை நேசிக்க கற்று கொள்ளுவோம். அப்படி நீங்கள் செய்யும் போது தேவனின் உள்ளம் நிச்சயமாக மகிழும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து  உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக .சகோ.சஞ்ஜீவ் விவேகானந்தராஜா.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?