கர்த்தரை உங்கள் வாழ்க்கையில் கனப்படுத்துவீர்களா ?

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (1 சாமூ 2 : 30 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார். நீங்கள் கர்த்தருடைய சமூகத்தில் உங்களைத் தாழ்த்தி, உங்களுடைய சுயசித்ததையும், உங்களுடைய சுயவிருப்பத்தையும் வெறுத்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய. சித்தத்தையும், அவருடைய  விருப்பத்தையும் நிறைவேற்றி கர்த்தரை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கனப்படுத்தும் போது கர்த்தர் உங்களை உங்கள் வாழ்க்கையில் கனப்படுத்துவார், மாறாக நீங்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாது உங்களுடைய சித்தத்தையும், உங்களுடைய விருப்பத்தையும் நிறைவேற்றி கர்த்தரையும், அவரது வார்த்தையையும் அசடடை பண்ணுவீர்களானால் நீங்கள் கர்த்தரால் கனவீனப்படுவீர்கள். சவுல் ராஜா கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையையாக கீழ்ப்படியாமல் அவருடைய வார்த்தையை அசடடை பண்ணினதால் கர்த்தர் அவனை ராஜ்ய பாரத்தில் இருந்து நீக்கினார். ஆம் பிரியமானவர்களே , கர்த்தரை உங்கள் வாழ்க்கையில் கனப்படுத்தி தேவ சித்தத்தை நிறைவேற்றுங்கள். கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?