சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் (யாக் 1:6). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நாம் கர்த்தரிடத்தில் ஒன்றைக் கேட்க்கும் போது விசுவாசத்தோடு கேட்க வேண்டும். நம்முடைய விசுவாசத்தில் சிறிதளவும் சந்தேகம் இருக்கக் கூடாது. கர்த்தர் ஜெபத்தில் கேட்க்கிறவற்றைக் கொடுப்பார் என்று விசுவாசிக்க வேண்டும், வேதம் சொல்லுகிறது , விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்த முடியாதென்று. ஒரு சிலர் சூழ்நிலை எப்படியாக இருந்தாலும் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனையே சார்ந்து, அவர் மீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை நிலையாக இருக்கும். ஆனால் வேறு சிலரோ அப்படியல்ல வாழ்க்கையில் எல்லாம் தங்களுக்கு சாதகமாக நடக்கும் போது உற்சாகமாக , சந்தோஷமாக இருப்பார்கள், கஷ்டம் வந்து விடடால் சோர்ந்து போய் விடுவார்கள், கடலின் அலையைப் போல் மேலும், கீழும் அலைந்து கொண்டிருப்பார்கள்.  இவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை நிலையாக இருக்காது. பிரியமானவர்களே,  கர்த்தரிடத்தில் ஒன்றைக் கேட்க்கும் போது சந்தேகத்தோடு கேடடால் அவரிடமிருந்து எதையுமே பெற்றுக்கொள்ள முடியாது, எல்லா சூழ்நிலைகளிலும் விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் , ஒரு சிறிதளவும் உள்ளத்தில் சந்தேகம் இருக்கக் கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் மனரம்மியமாக இருக்க வேண்டும். நாம் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்க வேண்டும். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?