தேசத்து தலைவர்களுக்காக ஜெபிக்கும் படி வேதம் சொல்லுகிறது

உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது (ரோம 13:1b). நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில் எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும். நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும் (1தீமோ 2:1-2). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே!  ரோமர் 13 ம் அதிகாரம் முதலாம் வசனத்தின் படி தேவன் தாமே தம்முடைய சித்தத்தின் படி தேசங்களில் தேசத் தலைவர்களையும் , அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார். ஒரு சில தேசத் தலைவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இது தேவன் செய்த தப்பிதமல்ல. தேவன் எப்போதும் நல்லவர்தான், அவர் எப்போதும் நன்மையானதை மாத்திரமே செய்கிறார். அதிகாரத்தை பெற்று இருக்கிறவர்களே தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தை நீதியாக பயன்படுத்தாமல் அநீதியான முறையில் பயன் பயன்படுத்துகிறார்கள். ஆகவே ஒவ்வொரு தேசத்து மக்களும், தங்களுக்காக ஜெபிப்பதோடு, மற்ற எல்லா தேச மனுஷர்களுக்காகவும், தேசத் தலைவர்ளுக்காகவும் , அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது (1தீமோ 2:1-2). தேசத்திலே தேசத் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிற இவர்கள் அநீதியான முறையில் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாததென்றும், வேதத்துக்கு புறம்பான சட்ட்ங்களை , தேவனுக்கு பிரியமில்லாத , அருவருப்பான காரியங்களை இவர்கள் தேசத்துக்குள் கொண்டு வந்து தேசத்தை இவர்கள் சீரழிக்காத படியும், இவர்கள் தேவனுக்குப் பயந்து , தேவ ஆலோசனையின் படி தேசத்தை நடத்தி தேசத்தின் பொருளாதாரத்தை இன்னுமாக கட்டியெழுப்பும் படியாகவும், தேசத்தின் அமைதி நிலை , சமாதானத்துக்காகவும், தேசத் தலைவர்களாக இருக்கும் இவர்கள் தேச மக்களுக்கு முன்பாக சாட்சியுள்ள வாழ்க்கை வாழும் படியாகவும் ஒவ்வொரு தேசத் தலைவர்களுக்காகவும் , தேசத்துக்காகவும்  ஜெபிக்க வேண்டியது ஒவ்வொரு தேச மக்களின் கடமையாக இருக்கின்றது. அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடுமபத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?