அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?

அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவி 19:31). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,   அஞ்சனம் பார்க்கிறதும், குறி சொல்லுவதும் தேவனுக்கு விரோதமான காரியங்கள். இவைகள் பிசாசின் கிரியைகள், ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற தேவனுடைய பிள்ளைகள் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறி சொல்லுகிறவர்களையும் தேடிப் போகக்கூடாது. வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான் (1 சாமூ 28:7-8 ). அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான் (1 நாளா 10:13). சவுலைப் போல் இன்று ஒரு கூடட கிறிஸ்தவர்கள் அஞ்சனம் பார்க்கிறவர்களிடமும்  , குறி சொல்லுகிறவர்களிடமும் சென்று தங்களுடைய எதிர் காலத்தை விசாரிக்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் இருமணமுள்ளவர்களாய் இருக்கக் கூடாது. கர்த்தருடைய பிள்ளைகள் அங்கு ஒரு காலும் , இங்கு ஒரு காலும் வைக்கக் கூடாது. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தரைப் பற்றிய சந்தேகம் இருதயத்தில் இருக்கக் கூடாது. கர்த்தருடைய பிள்ளைகளிடத்தில் தெளிவு இருக்க வேண்டும். அஞ்சனம் பார்க்கிறவர்கள், ஜோசியம் பார்க்கிறவர்கள் மரித்தோர்களிடம் , அசுத்த ஆவிகளிடம் உயிரோடு இருப்பவர்களின் எதிர்காலத்தைக் குறித்து விசாரிக்கிறார்கள். இவைகள் தேவனுடைய பிரமானத்துக்கு எதிரான காரியங்கள். தேவனால் மாத்திரமே மறை பொருளான இரகசியங்களை வெளிப்படுத்த முடியும், அவரே ஒவ்வொரு மனுஷனையும்  சிருஷ்டித்தவர். இன்று பிசாசுகளும் தந்திரம் பண்ணி தங்களாலும் மறை பொருளை வெளிப்படுத்த முடியும் என்று ஜனங்களை மாயஜாலம் பண்ணி ஜனங்களை ஏமாற்றுகின்றன. ஆகவே கர்த்தருடைய பிள்ளைகள் ஜோசியக்காரரையும் , அஞ்சனம் பார்க்கிறவர்களையும் , குறி சொல்லுகிறவர்களையும் தேடி போவதையும் , மற்றும் அதிஷ்டங்களை நம்புவதையும்  தவிர்த்துக்கொள்ள வேண்டும். கர்த்தரை  நம்புங்கள், அவர் உங்களுக்காக நல்ல எதிர்காலத் திட்ட்ங்களை வைத்திருக்கிறார். தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்