இயேசு மாத்திரமே ஆராதனைக்குரியவர்

ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இன்று கிறிஸ்தவர்கள் மாத்திரமல்ல முழு உலகமும்  இயேசுவின் பிறந்த நாளைக் (கிறிஸ்த்மஸ் பண்டிகையைக்)  கொண்டாடிக்கொண்டிருக்கின்ற இந்த நாட்களில் , மரியாள் யார் ? இயேசு யார் ? இவர்களில் வணக்கத்துக்குரியர் ஆராதனைக்குரியவர் யார் ? என்பதை வேதத்தின் அடிப்படையில் உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். மத்தேயு 2ம் அதிகாரம் 10 ம் 11 ம் வசனங்கள் இவ்வாறு சொல்லுகின்றன. அவர்கள் (சாஸ்திரிகள்) அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் (மத் 2:10) அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து பிள்ளையை (இயேசுவை) பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும்  பிள்ளைக்கு (இயேசுவுக்கு) காணிக்கையாக வைத்தார்கள் (மத் 2:11)என்று. பிரியமானவர்களே, சாஸ்திரிகள் முன்பு இப்படிப்படட நட்சத்திரத்தை அவர்கள் வாழ்வில் கண்டதில்லை, இப்போது அவர்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது பூமியிலே விசேஷித்தவர் ஒருவர் (ஆண்டவர் மனிதனாக) பிறந்திருக்கிறார் என்று, ஆகவே இயேசுவை பணித்து கொள்ளும் படி (மரியாளை அல்ல) கிழக்கில் இருந்து பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும்  பிள்ளைக்கு (இயேசுவுக்கு) காணிக்கையாக எடுத்துக் கொண்டு வருகிறார்கள் (அந்த நாட்களில் கிழக்கு தேசத்தில் ஒருவர் தனக்கு மேலான அதிகாரமுள்ளவரை சந்திக்கும் போது மரியாதையின் நிமித்தமாக காணிக்கையை எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது)  சாஸ்திரிகள் கண்ட அந்த நட்சத்திரம் யூதேயா தேசத்துக்கு வந்து இயேசு கிறிஸ்து இருந்த ஸ்தலத்துக்கு மேல் வந்து நிட்கும் வரைக்கும் சாஸ்திரிகளுக்கு முன் சென்றது. பொன் - ராஜாவாக அவர்கள் இயேசுவை அங்கீகரிப்பதைக் குறிக்கின்றது , தூபவர்க்கம் - இயேசுவை அவர்கள் தேவனாக அங்கீகரிக்கிறார்கள் ,  வெள்ளைப்போளம் - தேவன் மனிதனாக பிறந்திருப்பதைக் குறிக்கின்றது. அல்லேலூயா ! இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் சாஸ்திரிகள் இயேசுவின் தாய் மரியாளை பணிந்து கொள்ளவுமில்லை, மரியாளுக்கு காணிக்கை கொடுக்கவுமில்லை  இயேசுவை மாத்திரமே பணிந்து கொண்டு அவருக்கு மாத்திரமே காணிக்கை செலுத்துகிறார்கள். ஆகவே இயேசுவின் தாய் மரியாளுக்கு கொடுக்க வேண்டிய கனத்தை நாம் கொடுக்க வேண்டுமே தவிர மரியாள் ஆராதனைக்குரியவள் அல்ல. இயேசு மாத்திரமே ஆராதனைக்குரியவர், அவரே மனித குலத்தை பாவத்தில் இருந்து மீட்பதட்காக தன்னுடைய பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி கல்வாரி சிலுவையில் மரித்தவர். மரியாள் மனித குலத்தின் பாவத்துக்காக மரிக்கவில்லை,  தேவன் இந்த பூலோகத்துக்கு மானிடனாய்ப் பிறக்க ஒரு தாய் தேவைப்பட்ட்து, ஆகவே மரியாளை தன்னுடைய பூலோக தாயாக தேவன் தெரிந்து கொண்டாரே தவிர மரியாள் கடவுள் அல்ல. மரியாளை வணங்கும் கத்தோலிக்கர்களே மனந்திரும்புங்கள். இயேசு மாத்திரமே தேவன். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  



 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?