ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண வேண்டுமா ?

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன் (சங் 27:13). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய வாழ்க்கையில் பாடுகளுக்கூடாகவும், உபத்திரவங்களுக்கூடாகவும் கடந்து சென்ற போது ‘ நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்’  என்று விசுவாசித்தார், அவர் தனது இறுக்கமான, நெருக்கமான சூழ்நிலையை பார்க்கவில்லை மாறாக அந்த இறுக்கமான, நெருக்கமான சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவிக்கப் போகும் கர்த்தர் மீது அவர் அசைக்க முடியாத  , ஒரு பலமுள்ள விசுவாசத்தை வைத்திருந்தார்.  கர்த்தர் மீது அவர் வைத்திருந்த அந்த பலமுள்ள விசுவாசமே அவர் கெட்டுப்போகாத படி, அவர் அழிந்து போகாத படி அவரை பாதுகாத்ததோடு ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண, ருசிக்க அவருக்கு உதவி செய்தது .ஜீவனுள்ள தேசம் என்பது நாம் வாழும் இந்த வாழ்க்கையைக் குறிக்கின்றது.  எபிரேயார் 11:6 இல் வாசிக்கிறோம்  விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம் என்று. ஆம் பிரியமானவர்களே,  தாவீதை போல் நாமும்  பிரச்சனையின் மீது நம்முடைய கவனத்தை வைக்காமல் , அந்த பிரச்சனையிலிருந்து எங்களை விடுவிக்கும் கர்த்தர் இயேசு மீது எங்களுடைய விசுவாசத்தை வைப்போம். அப்போது தான் எங்களாலும் தாவீதைப் போல் ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண, ருசிக்க முடியும். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும்  ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?