ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர் (தானி 2:21). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவனே ஞானத்தின் மற்றும் அறிவின் ஆசிரியர் அவரே ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். ஞானமும், அறிவும் தேவனிடத்தில் இருந்து வருகின்றது, வேதத்தில் நாம் வாசிக்கிறோம் சாலமோன் ராஜா தன்னுடைய தேச ஜனங்களை விசாரிக்க தேவையான ஞானத்தை தனக்குத் தந்தருளும் படி தேவனிடம் கேடட போது தேவன் அவருக்கு ஞானத்தைக் கொடுத்து ஆசிர்வதித்தார். இன்று உங்களுக்கு இருக்கின்ற ஞானத்துக்காக , அறிவுக்காக நீங்கள் பெருமைப்படாமல் , உங்களை நீங்கள் மேன்மை பாராடடாமல், உங்களுக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுத்த தேவனுக்கு ஒவ்வொரு நாளும் மறவாமல் நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா ! இன்று எங்களுக்கு குடும்பத்தை நேர்மையான வழியில், நீதியின் பாதையில் நடத்த , அலுவலக காரியங்களை சரியாக, ஒழுங்காக செய்ய அல்லது தேவனுடைய ஊழியத்தை நேர்த்தியாய் செய்ய எங்களுக்கு இன்னும் அதிக ஞானமும், அறிவும் தேவைப்படுகிறது ஆகவே யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கும் தேவனிடம் இருந்து அதிக ஞானத்தையும், அறிவையும் பெற்றுக் கொள்ளுவோம் . யாக்கோப்பு 1 : 5 இல் நாம் வாசிக்கிறோம் ‘ உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் ‘ என்று. தேவன் தான் கொடுத்த வாக்கில் உண்மையுள்ளவராக இருக்கிறார். ஆகவே விசுவாசத்தோடு தேவனிடம் ஞானத்தையும், அறிவையும் கேட்டு பெற்றுக்கொள்ளுவோம். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment