கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்

கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன் (ஏசா 60:22). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,        சில சமயங்களில் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் வேளைகளில் கைகூடி வராத  பட்ச்சத்தில் நீங்கள் சோர்ந்து போய் விடுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு காரியத்தை இங்கே புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. உங்களுடைய வேளை கர்த்தருடைய வேளையாகாது. அவர் எல்லாவற்றையும் அறிந்த சர்வ ஞானமுள்ளவராக இருப்பதினால் அவர் உங்களுடைய விருப்பத்தின் பிரகாரமாகவும், உங்களுடைய  திடடத்தின் பிரகாரமாகவும் உங்களுடைய வாழ்க்கையில் அவர் கிரியை செய்யாமல் அவர் தமது சித்தத்தின் பிரகாரமாகவும், தமது திடடத்தின் பிரகாரமாகவும், தமது ஞானத்தின் பிரகாரமாகவும் உங்களுடைய வாழ்க்கையில் கிரியை செய்கிறார். அல்லேலூயா ! கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத்  தீவிரமாய் நடப்பிப்பேன்’  என்று வாக்குக் கொடுத்த தேவன் தனது வாக்குத்தத்தத்தில் அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். நிச்சயமாக அவர் உங்களுடைய வாழ்க்கையில் அவருக்குச் சித்தமாவற்றை அவருடைய வேளையில் தீவிரமாய் நடப்பிக்கப்பண்ணி தனது நாமத்தை உங்களுடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்துவார். கர்த்தர் மீது தொடர்ந்து விசுவாசமாய் இருங்கள். தாமதித்தாலும் கர்த்தரால் முன்குறிக்கப்படட , தீர்மானிக்கப்படட காலத்தில் காரியம் கர்த்தரால் கை கூடி வரும். அல்லேலூயா !  கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?