ஆண்டவராகிய இயேசுவின் சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், அவருடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவோம்

உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன் (சங் 145 : 5 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நீங்கள்  மற்றவர்களுடன் எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதோ , எப்படிப் பேசுகிறீர்கள் என்பதோ முக்கியமல்ல, நீங்கள் யாரைப் பற்றி, எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்பது தான் முக்கியம். இங்கே தாவீது ராஜா மற்றவர்களுடன் பேசும் போது,  ஜீவனுள்ள தேவனுடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், அவருடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவதட்கு தன் உள்ளத்தில் தீர்மானம் எடுத்துக்கொள்ளுகிறார். அல்லேலூயா. நீங்கள் மற்றவர்களுடன் பேசும் போது யாரைக் குறித்துப் பேசுகிறீர்கள்? எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்? தேவையில்லாத வெட்டிப்பேச்சு பேசுவதை நிறுத்தி விட்டு, உலகமெல்லாம் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் ( இயேசுவின் பிறந்த நாளை) கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் , நாமும் தாவீது ராஜாவைப் போல் ஜீவனுள்ள தேவன் இயேசுவைக் குறித்து, அவர் பூலோகத்தில் மானிடனாக பிறந்ததின் பிறப்பின் நோக்கத்தைக் குறித்து, அவர் கல்வாரி சிலுவையில் மானிடர்களுக்காக செய்த தியாகத்தைக் குறித்து, அவருடைய உயிர்தெழுதலைக் குறித்து, அவருடைய வருகையைக் குறித்து, அவருடைய நியாயத்தீர்பைக் குறித்து, அவர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளைக் குறித்து, அதிசயங்களைக் குறித்து, அவருடைய மகிமைப்   பிரதாபத்தைக் குறித்துப் பேசுவோம். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக . 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?