கர்த்தருடைய கிருபையின் முக்கியத்துவம்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென் (வெளி 22:21). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே  , அப்போஸ்தலனாகிய யோவான் இயேசு கிறிஸ்த்துவின் கிருபையின் முக்கியத்துவத்துவதை நன்கு அறிந்திருந்த படியால்,  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென் என்று சொல்லி ஒவ்வொருவரையும் நிறைவாய் ஆசீர்வதிக்கிறார். இந்த பூலோகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயேசு கிறிஸ்துவின் கிருபை மிகவும் அதிகமாய் தேவைப்படுகின்றது. ஆகவே ஒவ்வொரு மனுஷனும் தேவனின் கிருபைக்காக வாஞ்சிப்பதோடு ,  ஜெபித்து தேவனிடம் இருந்து அவருடைய கிருபையை பெற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தருடைய கிருபை ஒருவனுக்குள் பெருகும் போது தான் அவன் தன் ஆவிக்குரிய ஜீவியத்தில் கர்த்தருக்கேற்ற பரிசுத்தத்தில் முன்னேற்றம் அடைந்து , ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர முடியும். அவருடைய கிருபை உங்களுக்கு இல்லாவிடில் பரலோகத்தில் கிறிஸ்துவின் மகிமையிலே பங்கு பெற முடியாது. ஆகவே பிரியமானவர்களே , கர்த்தருடைய கிருபைக்காக அளவுக்கதிகமாக வாஞ்சித்து கர்த்தரிடம் இருந்து அவருடைய கிருபையை பெற்றுக்கொள்ளுங்கள். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?