முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது

முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது (ரோம 15 : 4b ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,  பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கிற சம்பவங்கள் எல்லாம் நமக்கு ஒரு போதனையாக எழுதப்பட்டிருக்கிறது. தேவனால் அவருடைய கனமான ஊழியத்தைச் செய்யும் படி அழைக்கப்படட சிம்சோன் , தாவீது, போன்றோர் தங்களுடைய வாழ்க்கையில் தேவனுக்கு விரோதமாக பாவங்களைச் செய்து தேவ மகிமையை இழந்து போனார்கள், அவ்வாறு தேவனால் அவருடைய கனமான ஊழியத்தைச் செய்யும் படி அழைக்கப்படட  மனிதர்களுடைய தவறுகளை நாமும் வாழ்க்கையில் செய்து விடக்கூடாது என்பதுக்காகத்தான் தேவன் அவர்கள் செய்த தவறுகளையும் நமக்கு வேத புஸ்தகத்தில் ஒரு போதனையாக, படிப்பினையாக எழுதிக் கொடுத்திருக்கிறார். அதுவே வேத புஸ்தகத்தின் அழகு. அல்லேலூயா ! வெறுமனே வாழ்க்கையில் எந்த தவறும் செய்யாத பரிசுத்தவான்களான யோசேப்பு, தானியலின் வாழ்க்கையை மாத்திரம் தேவன் எங்களுக்கு வேத புஸ்தகத்தில் எழுதியிருப்பாரென்றால் நாம் வாழ்க்கையில் சோர்ந்து போயிருப்போம். ஆனால் பரிசுத்தவான்களின் தவறுகளையும் தேவன் நமக்கு வேத புஸ்தகத்தில் போதனையாக, படிப்பினையாக எழுதிக் கொடுத்து அதன் மூலம் நம்மை தேவன் வாழ்க்கையில் பலப்படுத்துகிறார். அல்லேலூயா ! பாவம் செய்து விடடேன், வாழ்க்கையில் தவறி விடடேன் என்று சோர்ந்து போய் , கவலைப்பட்டு கொண்டு இருக்கிறீங்களா? கவலைபடாதிருங்கள். சிம்சோன், தாவீது தாங்கள் தங்களுடைய வாழ்க்கையில் செய்த பாவங்களை தேவ சமூகத்தில் கதறி அழுது பாவ அறிக்கை செய்த போது தேவன் அவர்களுடைய பாவங்களை மன்னித்தது மாத்திரமல்ல அவர்களை அவருடைய நாமத்தின் மகிமைக்காக வல்லமையாக எடுத்து பயன்படுத்தினார். அல்லேலூயா ! புதிய வருடத்துக்குள் 2020 ம் ஆண்டுக்குள் சில மணித்தியாலத்துக்குள் பிரவேசிக்க, காலடி எடுத்து வைக்க இருக்கும் நீங்கள், வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுக்காக, தேவனுக்கு விரோதமாக செய்த பாவத்துக்காக தேவ சமூகத்தில் பாவ அறிக்கை செய்யாதிருப்பீர்களானால், இப்போதே கால தாமதம் பண்ணாமல், தேவனுக்கு விரோதமாக நீங்கள் செய்த பாவத்துக்காக, மீறுதலுக்காக தேவ சமூகத்தில் பாவ அறிக்கை செய்து, தேவனுக்குப் பிரியமில்லாத, அருவருப்பான எந்த ஒரு காரியத்தையும் வாழ்க்கையில் இனி செய்ய மாடடேன் என்று ஒரு புதிய தீர்மானத்தை வாழ்க்கையில் எடுத்துக் கொண்டு புதிய வருடத்துக்குள் 2020 ம் ஆண்டில் காலடி எடுத்து வையுங்கள். நிச்சயமாக தேவன் உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பதோடு , கர்த்தருக்குள் ஒரு மன மகிழ்ச்சியுள்ள ஆண்டாக 2020 ம் ஆண்டை உங்களுக்குக் கொடுப்பார். அல்லேலூயா !  தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?