எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் (சங் 121:1) வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும் (சங் 121 :2).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.இந்த வேத வசனங்கள் தேவ ஆவியின் உந்துதலினால் தாவீது இராஜாவினால் எழுதப்பட்டிருக்கின்றது (2தீமோ 3:16). தாவீது இராஜாவின் கண்கள் எந்த ஒரு மனிதனையும் உதவிக்காக நோக்கிப் பார்க்கவில்லை, மாறாக அவருடைய கண்கள் தனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களை நோக்கிப்பார்த்தது. பர்வதங்கள் என்ற பதத்துக்கு ஆங்கிலத்தில் hills/ mountains (மலை) என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, அப்படியென்றால் தாவீது மலைகளை ஒத்தாசைக்காக, உதவிக்காக நோக்கி பார்த்தார் என்று அர்த்தம் அல்ல, அவருடைய கண்கள் ஒத்தாசைக்காக வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரை நோக்கி பார்த்தன. ஆம் பிரியமானவர்களே, வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரே அந்த ஒத்தாசை வரும் பர்வதம். இதை வாசித்துக் கொண்டிருக்கும் தேவ பிள்ளைகளே, ஒரு வேளை நீங்கள் பண பிரச்சனையினால் அல்லது வேதனைகளினால், துன்பங்களினால், வியாதிகளினால் சமாதானமில்லாமல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம், இந்த சூழ்நிலையில் உங்கள் கண்கள் ஒத்தாசைக்காக யாரை நோக்கி பார்க்கின்றன? நண்பர்களையோ, உறவினர்களையோ, அதிகாரிகளையோ, மருத்துவர்களையோ, சடடதரணிகளையோ ஒத்தாசைக்காக நோக்கி பார்ப்பதை நிறுத்தி விட்டு, தாவீது இராஜாவைப் போல், வானத்தையும், பூமியையும் படைத்த தேவனை ஒத்தாசைக்காக நோக்கி பாருங்கள் ,அவரிடம் இருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Amen
ReplyDelete