தேவன் உங்களுக்கு வெளிச்சத்தையும், நன்மையையும் விதைத்திருக்கிறார்

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது (சங் 97 :11). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தையும் மகிழ்ச்சியையும் விதைத்திருக்கிறார்.அவற்றின் பலனை ஒருவேளை நீங்கள் உடனடியாக காணாமல் போகலாம் ஆனால் விதைக்கப்பட்ட்து நிச்சயமாகவே ஏற்ற காலத்தில் முளைத்து எழும்பும். உதாரணமாக ‘ விதைக்கப்படட மாம்மர விதையானது’ ஒரு மரமாய் வளர்ந்து, பூத்து காய்த்து அது கனி கொடுக்க வருடங்கள் தேவைப்படுகின்றன அதுவரை பொறுமையோடு காத்து இருக்க வேண்டும் , அதே போலத்தான் உங்களுக்குரிய நன்மைகளை தேவன் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார், அவற்றை ஏற்கனவே உங்களுக்காக முன்குறித்து விட்டார், அவற்றை உங்களுக்கென்று விதைத்து விட்டார். அதை எந்த மனிதர்களாலும், எந்த தீய சக்தியாலும்  தடை செய்ய முடியாது, ஆனால் அந்த மகிழ்சசி என்னும் விதை உங்களுக்கு பலன் தரும் வரை நீங்கள் பொறுமையோடு காத்திருக்க வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. ஆபிரகாம் 25 வருடங்கள் வாக்குத்தத்த பிள்ளை ஈசாக்குக்காக  காத்திருக்கவில்லையா? ‘நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்’ (நீதிமொழிகள் 13:12) என்று வேதம் கூறுகிறது. ஆம், நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிந்து இருக்கிறார். அதை அவர் ஏற்ற வேளையில் உங்களுக்கு கொடுக்கும்போது நிச்சயமாகவே அது ஜீவ விருட்சத்தை போல நல்ல பலனை உங்களுக்கு கொடுப்பதாக இருக்கும். அல்லேலூயா!. பிரியமானவர்களே, எவ்வளவு காலம் காத்திருப்பது என சோர்ந்து போகாதீர்கள், உங்களது ஜெபத்திற்கும் , உங்களது கண்ணீருக்கும், உங்களது கிரியைக்கும் ஏற்ற காலம் வரும்போது, அத்தனை பலனையும் நீங்கள் காண்பீர்கள்.நீங்கள் தேவ சமுகத்தில் விடட அத்தனை கண்ணீரும் வீணாய் போகாது. அவை அனைத்தும் தேவனுடைய கணக்கில் இருக்கிறது. ஆகவே இதுவரை நான் நீதியாய் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? ஜெபித்து, தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்து என்ன பிரயோஜனம் ? என்று உங்கள் உள்ளத்திலும் கூட நினைக்காதீர்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு. உங்கள் நம்பிக்கை வீண் போகாது. அல்லேலூயா! ‘ஒவ்வொன்றிற்கும்  ஒரு காலமுண்டு’ தேவன் உங்களுக்கென்று நியமித்திருக்கிற காலத்தில் நீங்கள் அதன் பலனை கான்பீர்கள்.கர்த்தர் இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?