நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது (சங் 147:5). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய மகத்துவத்தைக் குறித்து இங்கே நாம் வாசிக்கின்றோம். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவராய் இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது என்று வேதம் சொல்லுகின்றது. ஆம் பிரியமானவர்களே , தேவன் சர்வஞானமுள்ளவர், அவருடைய அறிவின் ஆழத்தை மனுஷனால் காணவும் முடியாது ,அறிந்து கொள்ளவும் முடியாது, அவர் அவ்வளவு பெரியவராய் இருக்கிறார்.எரேமியா10 ம் அதிகாரம் 12 ம் வசனத்தில் நாம் வாசிக்கின்றோம் ‘ தேவன் பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார் ‘ என்று. வானத்தை தம்முடைய அறிவினால் விரித்தவருடைய ஞானத்தின் ஆழத்தை , அறிவின் ஆழத்தை எந்த மனுஷனாலும் காண முடியாது, அவருடைய அறிவோ அளவில்லாதது. தேவன் அவ்வளளவு பெரியவராகவும், பெலமுள்ளவராகவும், வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார், அவர் சரவவல்லமையுள்ள தேவன்.அல்லேலூயா ! அந்த சர்வவல்லமை உள்ள தேவனை தெய்வமாக கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள்.அவர் உங்களுடைய பிரச்சனைகளை பார்க்கிலும், உங்கள் தேவைகளை பார்க்கிலும்,உங்களுடைய வியாதிகளை பார்க்கிலும் பெரியவராய் இருக்கிறார்.ஆகவே உங்களை சிருஷ்டித்த அந்த தேவன் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள்.அவர் உங்களை கை விடவும் மாடடார், உங்களை வெட்க பட்டு போகவும் விட மாடடார்.அவர் நிச்சயமாக உங்களை உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுதலை செய்வார், உங்கள் தேவைகளை ஏற்ற வேளைகளில் சந்திப்பார்,உங்கள் வியாதிகளை நீக்கி அவர் உங்களுக்கு சுகம் கொடுப்பார்.அல்லேலூயா ! தேவனை நம்புங்கள், அவர் மீது உங்கள் விசுவாசத்தை வையுங்கள். ஆமென் ! தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Amen
ReplyDelete