எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தெச 5:18).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் எங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனைத் துதிக்க,அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்.உங்களுடைய இருதயமானது கர்த்தரை துதிக்கும் துதிகளாலும், ஸ்தோத்திரத்தாலும் நிரம்பியிருக்கும் போது தேவனைப் பற்றி குறை சொல்ல உங்கள் இருதயத்தில் ஒன்றும் இருக்காது.ஆகவே இன்றையில் இருந்து உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியத்துக்கும் அது ஒரு வேளை சந்தோஷமான காரியமாக இருக்கலாம் அல்லது துக்கமான காரியமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment